சுண்டைக்காய் பொரியல்

Loading...

சுண்டைக்காய் பொரியல்
தேவையானவை:
பச்சை சுண்டைக்காய் – 250 கிராம், தேங்காய் துருவல் – ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
சுண்டைக்காயை காம்பு ஆய்ந்து சிறிது நசுக்கி, எண்ணெய் விட்டு வதக்கி, உப்பு சேர்த்து வேகவிட்டு தண்ணீர் வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வேக வைத்த சுண்டைக்காய், தேங்காய் துருவல் போட்டு கிளறி இறக்கவும்.


குறிப்பு:
வீட்டுக்கு ஒரு சுண்டைச் செடி இருந்தால் போதும்… வற்றல் தயாரித்து வைக்கலாம். பொரியல், கூட்டு, சாம்பார் என்று பலவிதமாக தயாரிக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply