சீரகம்

Loading...

சீரகம்இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும். மந்தத்தைப் போக்கும்; நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும். சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வல நீங்கும். அபரிமிதமான பித்தத்தைத் தணிக்கும். மயக்கத்தைப் போக்கி விடும். பித்த நீர் வாயில் ஊறுவதை நிறுத்தும். சீரகத்தில் பொன் சத்து இருப்பதாகச் சித்தர்கள் கூறியுள்ளார்கள். “நீ இதனையுண்டால் உன் உடல் பொன்னாகக் காண்பாயாக” என்று அவர்கள் கூறியுள்ளதை நினைவுபடுத்துகிறேன். அதனால் தான், சீரகத்தைத் தூள் செய்து சீரணி இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது உண்டு.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply