சிக்கன் முட்டை மிளகு சாப்ஸ்(Chicken egg pepper) | Tamil Serial Today Org

சிக்கன் முட்டை மிளகு சாப்ஸ்(Chicken egg pepper)

Loading...

sukkaa

தேவையானவை :

சிக்கன் – அரை கிலோ

முட்டை – 4

சாம்பார் வெங்காயம் – 100 கிராம்

இஞ்சி – சிறு துண்டு

பூண்டு – 6 பல்

காய்ந்த மிளகாய் – 4

தனியா – 1 டேபிள் தேக்கரண்டி

மிளகு – 2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணைய் – 1 குழிக்கரண்டி

கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு

செய்முறை :

1. சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். முட்டையை வேக வைத்து மஞ்சள் கருவை நீக்கி இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

2. தனியா, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, வெங்காயம் ஆகியவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

3. அரைத்த மசாலாவை சேர்த்து சிக்கனையும் சேர்த்து சிறிது நீர் ஊற்றி வேக விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

4. சிக்கனும், மசாலாவும் சேர்ந்து கெட்டியானதும் வெட்டி வைத்த முட்டையைச் சேர்த்துக் கிளறவும். குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.

Loading...
Rates : 0
VTST BN