சிக்கன் மிளகு மசாலா (Chicken Pepper Spices)

Loading...

சிக்கன் மிளகு மசாலா (Chicken Pepper Spices)


தேவையானவை :

கோழிக்கறி – 1/2 கிலோ,

பெரிய வெங்காயம் – 2, (பொடியாக நறுக்கியது)

நெய் – 1 டேபிள் ஸ்பூன்,

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

தக்காளி – 2, (நறுக்கியது)

எலுமிச்சம் பழம் – 1மூடி,

உப்பு – தேவைகேற்ப,

எண்ணெய் – 4 ஸ்பூன்.


அரைக்க தேவையானவை :

பச்சை மிளகாய் – 6,

இஞ்சி – 1 இன்ச் துண்டு,

தனியா – 2 டேபிள் ஸ்பூன்,

மிளகு – 2 டீஸ்பூன்,

பூண்டு – 8 பல்,

தேங்காய் – 1/2 மூடி,

ஏலக்காய் – 2,

பட்டை – சிறிது,

கிராம்பு – 3,

புதினா – 1 கைப்பிடி.


செய்முறை :

1.முதலில் மிக்ஸ்சியில் அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும்.வதங்கிய பின், தக்காளி, அரைத்த விழுது போட்டு வதக்கவும்.பச்சை வாசனை போனதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கிய பின், இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.சிக்கன் நன்கு வெந்ததும், நெய் ஊற்றி, எலுமிச்சம் பழ சாறு சேர்த்து கலக்கி இறக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply