சிக்கன் மசாலா (Chicken Spices) | Tamil Serial Today Org

சிக்கன் மசாலா (Chicken Spices)

ads 1

சிக்கன் மசாலா (Chicken Spices)


தேவையானவை :

சிக்கன்-1/2 கிலோ (துண்டாக நறுக்கியது)

வெங்காயம்-1/2 கிலோ (பொடித்தது)

உப்பு-தேவைகேற்ப

மஞ்சள் பொடி – அரை டீஸ்பூன்

தனியாப் பொடி – ஒரு டீஸ்பூன

மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்

எண்ணெய் – 1/2 கப்

சோம்பு – 2 டீஸ்பூன்

பிரிஞ்சி இலை – 2

தக்காளி – 6

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகா‌ய் ‌விழுது

புளிக் கரைசல் – 1 கப்

துருவிய தேங்காய் – 1/2 மூடி

பட்டை – 2

சோம்பு – 2 டீஸ்பூன்


செய்முறை:

1.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, சோம்பு, பிரிஞ்சி இலை போட்டுத் தாளிக்கவும் பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் மசாலாப் பொடிகள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது எல்லாம் சேர்த்து வதக்கவும் பின், தக்காளி சேர்த்து தளதளவென்று கொதிவரும் போது சிக்கன் துண்டுகள் போட்டு வதக்கவும்.

2.இதனுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு, மிதமான தீயில் மூடி வைக்கவும். முக்கால் வாசி வெந்தவுடன் புளிக் கரைசலை விட்டு கொதிவந்ததும் தேங்காய், பட்டை,சோம்பு ‌விழுதை சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். ‌சி‌றிது நேர‌ம் கொதிக்கவிடவும்.

ads2
Rates : 0
6
7
VTST BN
9
10
11