சருமத்துக்கு பளபளப்பு தரும் பயத்தம் பருப்பு | Tamil Serial Today Org

சருமத்துக்கு பளபளப்பு தரும் பயத்தம் பருப்பு

Loading...

சருமத்துக்கு பளபளப்பு தரும் பயத்தம் பருப்புபெரியவர்கள், இளையவர்கள் என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல் பச்சிளங்குழந்தைகளின் சருமத்துக்கும் கூட பளபளப்பு தந்து பாதுகாப்பு வளையத்தையும் போனஸாக வழங்குகிறது பயத்தம் பருப்பு!இதோ இந்த பயத்தம் பருப்பு பேஸ் பேக்கைப் போட்டுப் பாருங்கள்… `ஆஹா… இது என் முகம் தானா?”
என்று ஆனந்த அதிர்ச்சியில் சிலையாகி நிற்பீர்கள்.

தோலுடன் முழு பச்சை பயறு – 2 டேபிள் ஸ்பூன்,
எலுமிச்சை இலை – 1 (நடு நரம்பை அகற்றி விடவும்),
வேப்பிலை -1,
துளசி-4,
பூலான் கிழங்கு-1,
ரோஜா மொட்டு-2,
கசகசா – அரை சிட்டிகை.

இவற்றை முந்தைய நாள் இரவே தயிரில் ஊறவைத்து, மறுநாள் அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள்.

இதனுடன், கஸ்தூரி மஞ்சள் தூள் -1 சிட்டிகை கலந்து கொள்ளலாம். குளிப்பதற்கு முன்பு முகத்துக்கு இந்த பேக் போட்டு, பத்து நிமிடம் கழித்து அலம்புங்கள். வாரம் இருமுறை இப்படி செய்து வாருங்கள். கண்ணாடி பார்க்கும் போது அசந்து போவீர்கள்.

இதில் சேர்க்கப்பட்டுள்ள
எலுமிச்சை இலை முகத்தை `ப்ளீச்’ ஆக்கும்.
துளசி, தோலை மிருதுவாக்கும்.
ரோஜா மொட்டு பளபளப்பு தரும்.
வேப்பிலை பருக்களை ஒழிக்கும்.
பூலான்கிழங்கு வாசனையை வழங்கும்.
கஸ்தூரி மஞ்சள் மினுமினுப்பு தரும்.

Loading...
Rates : 0
VTST BN