கோலா உருண்டைக் குழம்பு(Cola Orb Curry)

Loading...

கோலா உருண்டைக் குழம்பு(Cola Orb Curry)
தேவையானவை :

மட்டன் கைமா – 1/2 கிலோ,

கசகசா – 1 தேக்கரண்டி,

மிளகாய்தூள் – 1/2 தேக்கரண்டி,

பட்டை – சிறுதுண்டு சோம்பு,

உப்பு, எண்ணெய் – தேவையான அளவுஅரைக்கத் தேவையானவை :

தேங்காய் துருவல் – 1/2 மூடி,

வெங்காயம் – 1 நறுக்கியது.

மிளகாய் வற்றல் – 4,

தனியா தூள் – 1 மேசைக்கரண்டி,

சீரகம்-& 1 தேக்கரண்டி,

மேற்கூறிய பொருட்களை வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி அரைத்துக் கொள்ளவும்.செய்முறை :

1.கொத்திய கறியை நன்றாக சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும். வெந்த கறியுடன் லேசாக உப்பு சேர்த்து பட்டை, சோம்பு, கசகசா, மிளகாய்தூள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று விடவும்.

2.கறியுடன் மசால் கலவை சேர்ந்தவுடன் சிறிய எலுமிச்சம்பழ அளவில் அந்த கலவையை ஒவ்வொன்றாக உருட்டி தனியே வைக்க வேண்டும்.

3.குழம்பிற்கு அரைத்த மசாலாவுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கூட்டி வைக்கவும். குழம்பு கொதித்து வரும் போது செய்து வைத்த உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போடவும். தேவைக்கேற்ப கெட்டியான பதத்தில் குழம்பு வரும் போது இறக்கி விடவும். கோலா உருண்டை குழம்பு ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply