கோதுமை ரவை உப்புமா

Loading...

கோதுமை ரவை உப்புமா
தேவையானவை:
கோதுமை ரவை – 250 கிராம், பெரிய வெங் காயம் – 2, வறுத்த வேர்க்கடலை – ஒரு கப், பச்சை மிளகாய், எலுமிச்சம்பழம் – தலா ஒன்று, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்த மல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து… பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து, வதக்கிக் கொள்ளவும். இதில், ஒரு பங்கு கோதுமை ரவைக்கு இரண்டு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, நன்கு கொதிக்கவிடவும். பிறகு, உப்பு சேர்த்து, ரவையை தூவிக் கிளறி வேகவிட்டு, வறுத்த வேர்க்கடலையை உடைத்துப் போட்டு, எல்லாம் நன்கு கலந்துவரும்படி கிளறவும். கடைசியாக, எலுமிச்சம்பழம் பிழிந்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: இதே முறையில் சோள ரவையிலும் உப்புமா செய்யலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply