கொழுப்பைக் குறைக்க கேரட்

Loading...

கொழுப்பைக் குறைக்க கேரட்கேரட் இயற்கையாகவே இனிப்புத் தன்மை கொண்டுள்ளபடியால் பச்சையாக சாப்பிட மிகவும் சுவையாய் உள்ளது. சமைத்து உண்பதைவிட பச்சையாக சாப்பிடுவதின் மூலம் அதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நமக்கு கிடைக்கும். இதில் வைட்டமின் ‘ஏ’ செறிந்துள்ள காரணத்தால், ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. அது மட்டுமன்றி இதில் அடங்கியுள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்புகளை கரைக்கும் திறன் கொண்டது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை தினமும் காரட் சாப்பிடுவதன் மூலம் சற்று குறைக்க இயலும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தியும் செய்கின்றது. குடல் புண்கள் உண்டாகாமல் தடுக்கின்றது. வாய் துர்நாற்றத்தை போக்கும் வல்லமை கொண்டது. பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை சக்தி அதிகரிக்கும். கேரட் சாற்றுடன் எலுமிச்சை சாறு சிறிது கலந்து சாப்பிட பித்த கோளாறுகள் சரியாகும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply