கொத்தவரங்காய் சாப்பிடுங்கள்: இரத்த அழுத்தத்தை குறையுங்கள்

Loading...

கொத்தவரங்காய் சாப்பிடுங்கள் இரத்த அழுத்தத்தை குறையுங்கள்கொத்தவரை இதய ஆரோக்கியத்துக்கு இன்றியமையாத ஓர் மருத்துவ உணவாக விளங்குகிறது.
அடங்கியுள்ள சத்துக்கள்

100 கிராம் கொத்தவரங்காயில், கால்சியம் – 130 கி, கார்போஹைட்ரேட்ஸ் – 11 கி, 16 கலோரி, நார்ச்சத்து 3 கி, இரும்புச்சத்து – 1 மிகி, கனிமச்சத்து – 1 கி, பாஸ்போரஸ் – 57மிகி, புரதச்சத்து – 3 கி.

மருத்துவ பயன்கள்

கொத்தவரையில் இருக்கும் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் போலேட் ஆகியவை இதயத்துக்கு வரக்கூடிய பல் வேறு நோய்களினின்றும் பாதுகாக்க வல்லவை.

சர்க்கரை மற்றும் கொழுப்பு சத்துக்களைக் குணப்படுத்தும் சத்துக்களை கொத்தவரை உள்ளடக்கியுள்ளதால் ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயலுகிறது.

கருவைச் சுமக்கும் தாய்மார்களுக்கு கொத்தவரை ஓர் உன்னத உணவும் மருந்தும் ஆகும்.

கர்ப்பிணிகளுக்கு தேவையான இரும்புச்சத்தும், சுண்ணாம்புத் சத்தும் கொத்தவரையில் மிகுதியாக உள்ளன.

மேலும் அதிக அளவிலான போலிக் அமிலத்தையும் கொத்தவரை பெற்றுள்ளது. குழந்தையின் மூளை, எலும்பு, முதுகுத்தண்டு போன்றவை சீராக வளர்வதற்கு இச்சத்துக்கள் தேவைப்படுகின்றன.

மேலும் கொத்தவரையில் உள்ள விட்டமின் K சத்தும் குழந்தையின் வளர்ச்சிக்கும் அதன் எலும்புகளின் வலிமைக்கும் மிக்க துணையாக விளங்குகின்றன.

கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் ரத்த ஓட்டம் சீர் பெற உதவுகிறது.

கொத்தவரை செரிமானத்துக்கு (னுபைநளவடி) மிகவும் உதவியாக விளங்குகிறது.

மூளைக்கு ஏற்படும் அழச்சியைத் தவிர்க்க கொத்தவரை ஓர் மருத்துவ உணவாகிப் பயன்தருகிறது. ரத்தத்தில் கலந்து துன்பம் செய்யும் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை கொத்த வரைக்கு இருப்பதால் மத்திய நரம்பு மண்டலத்துக்கு புத்துயிர்வை தருவதாக விளங்குகிறது.

மேலும் இச்சத்துக்கள் மன உளைச்சல் மற்றும் இதயப்படபடப்பு ஆகியவற்றைப் போக்க உதவி மனிதனுக்கு அமைதி தரவல்லதாய் விளங்குகிறது.

கொத்தவரையில் கிளைகோ நியூட்ரியன்ட் என்னும் மருத்துவ வேதிப்பொருள் மிகுதியாக உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள இயலுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply