குதிகால் பாதம் அழகு பெற

Loading...

குதிகால் பாதம் அழகு பெறகுதிகால்காளில் வெடிப்புகள் விழுந்திருப்பதை யாரும் விரும்புவதில்லை. பெண்களுக்கு இது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தும் முற்றவிட்டுவிட்டு பலவித வைத்தியத்தைத் தேடி அலைவார்கள். பெண்களின் கால்கள் வெடிப்பின்றி அழகாக இருந்தால் மட்டுமே அலங்காரங்களுக்கு ஏதுவாகும். அழகாக மருதாணி இடமுடியும். கொலுசு போட முடியும். அழகழகான கலணிகளுடன் அழகு நடை நடக்க முடியும் இல்லையா? எனவே கீறல் , வெடிப்பு இன்றி சிவந்து அழகாக இருந்திட உடம்பில் சூடு பித்தம் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ளவேண்டும். வழுக்கல் பாசியில் சீனாக்காரத்தைப் பொடியாக்கி கலந்து நன்கு உரசித் தேய்த்துவர பித்த வெடிப்பு நீங்கி கால்கள் அழகாகும். வெந்தயம் ஒரு தேக்கரண்டி அளவு நீரில் ஓற வைத்து அதனுடன் செம்பருத்திப்பூ, மஞ்சள், வேப்பிலைக் கொழுந்து வைத்து அரைத்து குதிகால்களில் தடவிவர கால்களில் உள்ள கீறல், வெடிப்புமறைந்து குதிகால்கள் அழகாகும். கடுக்காய், மாவிலைக் கொழுந்து , பாசிப்பயறு சேர்த்து அரைத்து கால்களைக் கழுவி சுத்தம் செய்த பின்னர் தடவி வர குதிகால்கள் அழகாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply