கிருமித் தொற்றுக்களை தடுக்கும் புதிய பேண்டேஜ் கண்டுபிடிப்பு

Loading...

கிருமித் தொற்றுக்களை தடுக்கும் புதிய பேண்டேஜ் கண்டுபிடிப்புபாரிய காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு உண்டாகும் கிருமித் தொற்றுக்களுடன் வலுவாக எதிர்த்து போராடக்கூடிய புதிய பேண்டேஜ் ஒன்றினை சுவிட்ஸர்லாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
பொதுவாக காயம் ஏற்பட்ட இடங்களில் பக்டீரியாத் தொற்றுக்களே அதிகளவில் காணப்படுவதாகவும், இந்த புதிய பேண்டேஜ் ஆனது அவற்றிற்கு எதிராக போராடி முழுமையான நிவாரணத்தை தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதன் பயனாக காயங்கள் விரைவாக குணவடைவதற்கு ஏதுவாக இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது பற்றி கருத்து தெரிவித்த Lausanne University Hospital இல் மறு சிகிச்சை பிரிவில் பணியாற்றும் Lee Ann Laurent “முன்னர் காணப்பட்ட பேண்டேஜ்கள் சில சமயங்களில் காயங்களை முழுமையாக மறைப்பதற்கு போதுமான அளவினைக் கொண்டிருக்கவில்லை எனவும், அவை அடிக்கடி மாற்றப்பட வேண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளதுடன், புதிய பயோடிலாஜிக்கல் பேண்டேஜ்களில் இவ்வாறான இடர்கள் இல்லை” எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply