காக்ரா

Loading...

காக்ரா

தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப், ஓமம் – சிறிதளவு, மிளகாய்த்தூள் – ஒரு சிட்டிகை, தண்ணீர் – தேவையான அளவு, நெய் – சிறிதளவு, உப்பு – ஒரு சிட்டிகை.செய்முறை:
கோதுமை மாவில் உப்பு, ஓமம், மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசிறி, தண்ணீர் விட்டுப் பிசையவும். 20 நிமிடம் ஊறவிடவும். மாவை மெல்லிய சப்பாத்திகளாக திரட்டி. சூடான தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு, வெந்ததும், திருப்பி போடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, அடி கனமான பாத்திரத்தால் சப்பாத்தியை அழுத்தியபடி, கரகரப்பாக ஆகும் வரை வேகவிட்டு எடுக்கவும். இது பிஸ்கட் போல இருக்கும்.
இதற்கு, ஊறுகாய் தொட்டு சாப்பிடலாம். காக்ரா செய்யும் மாவில் விருப்பத்துக்கு ஏற்றவாறு சீரகப் பொடி, ஆம்சூர் பவுடர், கஸூரி மேத்தி போன்றவற்றையும் கலந்து பிசையலாம்.

Loading...
Rates : 0
Loading...
VTST BN