கழிவுகளை சக்தியாக மாற்றும் இராட்சத தொழிற்சாலை

Loading...

கழிவுகளை சக்தியாக மாற்றும் இராட்சத தொழிற்சாலைசூழலில் அன்றாடம் வெளியேற்றப்படும் கழிவுப் பொருட்களை மூலப்பொருளாக பயன்படுத்தி சக்தியாக மாற்றக்கூடிய இராட்சத தொழிற்சாலை ஒன்று சீனாவின் Shenzhen நகரில் நிறுவப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய தொழிற்சாலையாக நிறுவப்பட்டுள்ள இத் தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு சுமார் 5,000 தொன் கழிவுகளை தகனம் செய்யும் பொறிமுறையின் ஊடாக சக்தியாக மாற்றக்கூடியதாக இருக்கின்றது.

1.6 கிலோமீற்றர்கள் நீளமான இந்த தொழிற்சாலையின் கூரையின் மேல் 44,000 சதுர அடி பரப்பளவு கொண்ட சோலர் படலம் பொருத்தப்பட்டுள்ளது.

எனினும் இத் தொழிற்சாலை 2020ம் ஆண்டு முதலே செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை இதிலிருந்து மின் சக்தியும் ஒரு பகுதியாக உற்பத்தி செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply