கலவைக் காய் சொதிகுழம்பு

Loading...

கலவைக் காய் சொதிகுழம்பு
தேவையானவை:
கேரட், குடமிளகாய், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் – தலா ஒன்று, அவரைக் காய் – 4, வேக வைத்த துவரம்பருப்பு – ஒரு கப், புளி – ஒரு எலுமிச்சம்பழ அளவு, சாம்பார் பொடி – 4 டீஸ்பூன், கடுகு, வெந்தயம் – தலா கால் டீஸ்பூன், தேங்காய்ப் பால் – 100 மில்லி, எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு,


செய்முறை:
கேரட்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குடமிளகாய், கத்திரிக்காய், அவரைக்காய், உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் ஓரளவு சிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு அனைத்து காய்களையும் வதக்கி உப்பு சேர்த்து, புளி கரைத்துவிட்டு, சாம்பார் பொடி போட்டு கொதிக்கவிடவும். வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து, தேங்காய்ப் பால் விட்டுக் கலக்கவும். கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.


குறிப்பு:
எல்லா காய்களும் மிச்சப்பட்டிருக்கும்போது இந்த குழம்பு தயாரிக்கலாம். தேங்காய்ப் பாலுக்கு பதில் தேங்காயை அரைத்து சேர்த்தும் கொதிக்கவிட்டு இறக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply