கருவளையம் காணாமல் போக தக்காளி பேஸ்ட்

Loading...

கருவளையம் காணாமல் போக தக்காளி பேஸ்ட்சிலருக்கு முகத்தில் மிருதுத் தன்மை மாறி, முரடு தட்டிப் போய் விடும். அவர்களுக்கான டிப்ஸ் இது. ஒரு தக்காளியை கூழாக்குங்கள். இதனுடன் அரை டீஸ்பூன் தயிரைக்கலந்து கொள்ளுங்கள். இதை முகத்துக்குப் பூசி, 5 நிமிடம் கழித்துக் கழுவுங்கள்.

முகம் மிருதுவாகி, தங்கம் போல் ஒளி வீசும். கண்ணுக்குக் கீழ் கருவள யம் விழுந்து சோக ராணியாக வலம் வருகிற உங்களை உற்சாக தேவதையாக்குவதில் தக்காளிக்கு நிகர் தக்காளி தான். ஒரு வெள்ளரித் துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள். இமைகளின் மேல் இந்தக் கலவையைப் பூசி, 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள்.

ஓரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே, கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும். கழுத்தில் கறுப்புக் கயிறு கட்டியது போல் கருவளையம் இருக்கிறதா? கவலை வேண்டாம்! இருக்கவே இருக்கிறது தக்காளி பேஸ்ட்.

தக்காளி சாறு – அரை டீஸ்பூன்,
தேன் – அரை டீஸ்பூன்,
சமையல் சோடா – ஒரு சிட்டிகை…

இந்த மூன்றையும் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கருவளையத்தின் மேல் பூசி, 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். வாரம் மூன்று முறை இப்படிச் செய்து வாருங்களேன். சங்குக் கழுத்துக்கு அர்த்தமே உங்கள் கழுத்துதான் என்றாகி விடும்!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply