கரும்புள்ளிகள் எளிதில் நீங்க

Loading...

கரும்புள்ளிகள் எளிதில் நீங்க
முள்ளங்கி :

முள்ளங்கியை சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து, உலர வைத்து கழுவினாலும், கரும்புள்ளிகள் மறையும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது நூறு சதவீத உண்மை. அந்த அகத்தை மாசற்ற வகையில் பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது.

அழுக்கு படிந்த முகத்தை நாம் கண்ணாடியில் பார்க்கும்போதே தன்னம்பிக்கை என்பது பறிபோய்விடும். அதனை நம்பிக்கையாக மாற்ற மேற் கூறிய மாஸ்க் வகைகளை (குறைந்த செலவு மட்டுமே) பயன்படுத்தி அகத்தை மேலும் அழகுற செய்வோம்.


உருளைக்கிழங்கு :

உருளைக்கிழங்கை பேஸ்ட் போல் அரைத்து, 30 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.


கொத்தமல்லி :

கொத்தமல்லியை அரைத்து, அதில் மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் லேசாக மசாஜ் செய்து, வெது வெதுப்பாக இருக்கும் நீரில் கழுவ வேண்டும்.


வெள்ளரிக்காய் :

முகத்திற்கு ஆவிப்பிடித்து 10 நிமிடம் கழித்து, வெள்ளரிக்காயை அரைத்து முகத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி, சுத்தமான துணியால் துடைத்தால், கரும்புள்ளிகள் எளிதில் நீங்குவதோடு, முகமும் பொலிவோடு இருக்கும்.


இஞ்சி :

ஒரு துண்டு இஞ்சியை எடுத்து, அதனை முகத்தில் 5-10 நிமிடம் தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை ஒரு நாளைக்கு 3 முறை செய்து வந்தால், கரும்புள்ளி போவது உறுதி

முகப் பருவைக் கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளியைப் போக்க ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப் பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும் புள்ளியின் மேல் போட்டு வரவும் .

தினமும் இது போல் செய்து வர சில நாட்களில் கரும்புள்ளி மறைந்து விடும்.

கோபி சந்தனம் – ஒரு டீ ஸ்பூன் அளவு
பாதாம் பருப்பு – மூன்று (நீரில் ஊற வைத்தது)
தயிர் – 2 – டீ ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 – டீ ஸ்பூன்

இவைகளை அரைத்து எடுத்து முகம்,கழுத்து பகுதிகளில் பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவவும்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகப்பரு கரும்புள்ளி ,தழும்புகள் நீங்கி முகம் அழகுபெரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply