கருமையை போக்கும் எலுமிச்சை ஃபேஸ் பேக்

Loading...

கருமையை போக்கும் எலுமிச்சை ஃபேஸ் பேக்எப்போதும் டூ-வீலரில் பறக்கும் அவசரப் பறவையா நீங்கள் இந்த வெயில், உங்களின் மென்மையான முகம், கை, பாதம் போன்ற பகுதிகளை பதம் பார்த்துவிடுமே… என்ன செய்யப் போகிறீர்கள்? இதோ, உங்கள் சருமப் பாதுகாப்புக்கு ஒரு விசேஷ குளியல் பவுடர்.

எலுமிச்சை தோல்-50 கிராம்,
கஸ்தூரி மஞ்சள்-100 கிராம்,
கசகசா- 50 கிராம்,
பயத்தம் பருப்பு- கால் கிலோ…

இவற்றை மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை தினமும் தேய்த்துக் குளித்து வாருங்கள். `வெயில் அடிச்சா எனக்கென்ன’ என்று உங்கள் சருமம் கொக்கரிக்கும். கூடவே, புதிய பொலிவோடு மினுமினுக்கும்.

டூ வீலரில் போனால் மட்டுமா? ரோட்டில் நடந்தாலே தூசு படிந்து தோல் மங்கலாகிவிடுகிறது. `எவ்வளவு அழகா இருந்த நான் இப்படி அழுக்கா ஆயிட்டேன்’ என்று கண்ணாடியை பார்த்து மனம் வெம்புபவர்களுக்கு, எலுமிச்சை தரும் பளிச் `பேக்’ இது…

கடலை மாவு- 6 டீஸ்பூன்,
முல்தானி மட்டி- அரை டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு- 4 டீஸ்பூன்…

இவற்றை நன்றாகக் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள். பிறகு, முகம் முதல் பாதம் வரை பூசி பத்து நிமிடங்கள் கழித்து குளியுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த `பேக்’கை போட்டுப் பாருங்கள். சருமத்தை சுத்தமாக்குவதுடன், இழந்த பொலிவை விரைவிலேயே மீட்டுத் தரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply