கத்தரிக்காய் வதக்கல்/kathirikai vathakkal

Loading...

கத்தரிக்காய் வதக்கல்

தேவையான பொருள்கள்

சின்ன கத்தரிக்காய் – கால் கிலோ
மிளகாய்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – சிறிதளவு
கடுகு – கால் ஸ்பூன்

செய்முறை:

கத்தரிக்காய நீள வாக்கில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயை தண்ணியை வடித்து விட்டு போடவும்.

பின்பு அதனுடன் மிளகாய்தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கி கடாயை மூடி 10 நிமிடம் வேக வைக்கவும். பின்பு திறந்து கிளரி இறக்கவும். இது சாம்பார் சாதத்திற்கு சூப்பர் காம்பினேசன்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply