கதம்ப சாம்பார்

Loading...

கதம்ப சாம்பார்

தேவையானவை:
துவரம்பருப்பு – 200 கிராம், புளி – 100 கிராம், சாம்பார் பொடி – 6 டீஸ்பூன், கத்திரிக்காய், முருங்கைக்காய், கேரட் – தலா ஒன்று, அவரைக்காய் – 4, பச்சை மிளகாய் – 2 , தேங்காய் துருவல் – ஒரு கப், கடலைப்பருப்பு, தனியா – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தாளிக்க தேவையான அளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.செய்முறை:
துவரம்பருப்பை குக்கரில் வைத்து குழைவாக வேகவிடவும். கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். கத்திரிக்காய், முருங்கைக்காய், கேரட், அவரைக்காய், பச்சை மிளகாயை நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்கவும். புளிக் கரைசலை அதில் விட்டு… உப்பு, சாம்பார் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். அரைத்து வைத்திருக்கும் கடலைப்பருப்பு கலவை, வேக வைத்த துவரம்பருப்பு இரண்டையும் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply