ஓட்ஸ் பெப்பர் கோழிக்கறி மசாலா(Oats pepper chicken masala)

Loading...

ஓட்ஸ் பெப்பர் கோழிக்கறி மசாலா(Oats pepper chicken masala)


தேவையானவை :

கோழிக்கறி – அரை கிலோ

ஓட்ஸ் – 100 கிராம்

மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1 சிட்டிகை

வெங்காயம் – 1

தக்காளி – 1

இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை :

1. கடாயில் எண்ணையை ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்க்கவும். கறிவேப்பிலை, தக்காளி, மஞ்சள்தூள், மிளகுத்தூள் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். காரம் அதிகம் வேண்டும் என நினைப்பவர்கள் சிறிது கூடுதலாக மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

2. தக்காளி வெந்ததும் மசித்து விட்டு, சிக்கனையும் அதனுடன் சேர்க்கவும். சிக்கன் வேகுமளவுக்கு சிறிதளவு மட்டும் நீர் விடவும். ஓட்சை லேசாக மிக்சியில் ஒரு சுற்று சுற்றி சிக்கன் வெந்ததும் சேர்க்கவும்.

3. மசாலாவுடன் சிக்கனும் ஓட்சும் வெந்ததும் சிறிது கிரேவியாக இருக்கும் பொழுது சிக்கனை இறக்கி வைத்து கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும். சூடாகப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply