ஓட்ஸ் – பனானா ஸ்மூத்தி

Loading...

ஓட்ஸ் - பனானா ஸ்மூத்தி
தேவையானவை:
ஓட்ஸ் – கால் கப், வாழைப்பழம் – ஒன்று, கோகோ பவுடர் – ஒரு டீஸ்பூன், தேன் – 2 டீஸ்பூன், பட்டைத்தூள் – கால் டீஸ்பூன், காய்ச்சி ஆறவைத்த பால் – அரை கப்.


செய்முறை:
வாழைப் பழத்தை தோல் உரித்து துண்டு களாக வெட்டி முதல் நாள் இரவு ஃப்ரிட்ஜின் ஃப்ரீஸர் பகுதியில் வைக்கவும். ஓட்ஸ், தேன், கோகோ பவுடர், பட்டைதூள், பால் எல்லாம் கலந்து முதல் நாள் இரவே ஃப்ரிட்ஜில் வைக்கவும். காலையில் ஓட்ஸ் கலவை, வாழைப்பழம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துப் பருகவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply