ஓட்ஸ் – கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்ஸ்

Loading...

ஓட்ஸ் - கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்ஸ்
தேவையானவை:
ஓட்ஸ் – 2 கப், கார்ன்ஃப்ளேக்ஸ் – ஒரு கப், பாதாம், வால்நட், உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழத் துண்டுகள், சர்க்கரை – தலா கால் கப், தேன் – 3 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், வெனிலா எசன்ஸ் – ஒரு டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், பால் – தேவையான அளவு.


செய்முறை:
வெறும் வாணலியில் ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸை சூடு செய்யவும். இதனுடன் பாதாம், வால்நட், உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழத் துண்டுகளைக் கலந்துகொள்ளவும். சிறிய பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை, தேன் சேர்த்து நுரை வரும் வரை கொதிக்கவைத்து அடுப்பை அணைக்கவும். இதனுடன் உப்பு, வெனிலா எசன்ஸ் சேர்க்கவும். இதனை ஓட்ஸ் கலவையில் நன்றாகக் கலந்து `மைக்ரோவேவ் அவன்’-ல் 300 டிகிரி ஃபாரன்ஹீட்டில் 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். ஆறியவுடன் காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும். பரிமாறும் முன் பால் சேர்க்கவும். விருப்பப்பட்டால் நறுக்கிய வாழைப்பழம் சேர்த்து சாப்பிடலாம்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply