ஒரே நேரத்தில் 60 நாடுகளில் கிடைக்கவிருக்கும் Samsung Galaxy S7

Loading...

ஒரே நேரத்தில் 60 நாடுகளில் கிடைக்கவிருக்கும் Samsung Galaxy S7உலக ஸ்மார்ட் கைப்பேசி சந்தையில் அப்பிள் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக திகழும் சாம்சுங் நிறுவனமானது Galaxy S7 ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
கைப்பேசி பாவனையாளர்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இக் கைப்பேசியானது எதிர்வரும் மார்ச் மாதம் 11ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இவ்வாறு அறிமுகம் செய்யப்படும் தருணத்திலேயே 60 வரையான நாடுகளில் உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியும் என Mobile World Congress நிகழ்வின்போது சம்சுங் நிறுவனத்தில் பணியாற்றும் Koh Fong-Jin என்பவர் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த 60 நாடுகளும் எவை என்ற தகவல் வெளியிடப்படாத நிலையில் அமெரிக்க, ஐக்கிய இராச்சியம் உட்பட ஏனைய ஐரோப்பிய நாடுகளும் உள்ளடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply