ஐக்கிய இராச்சியத்தில் அறிமுகமாகும் LG G Flex 2 கைப்பேசி

Loading...

ஐக்கிய இராச்சியத்தில் அறிமுகமாகும் LG G Flex 2 கைப்பேசிபிரம்மாண்டமான மொபைல் சாதன விற்பனையாளர்களான Carphone Warehous ஊடாக ஐக்கிய இராச்சியத்தில் LG G Flex 2 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இக்கைப்பேசியினை EE, O2 மற்றும் Vodafone ஆகிய வலையமைப்புகளின் ஊடாக சேவையைப் பெற விரும்புபவர்கள் மாதந்தோறும் 33 பவுண்ட்ஸ் தவணைக் கட்டணத்தில் 2 வருட ஒப்பந்தத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
இதன் மொத்த பெறுமதி 529.99 பவுண்ட்ஸ்களாகும்.
இக்கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய P-OLED தொழில்நுட்பத்தினைக் கொண்ட திரையினை உள்ளடக்கியுள்ளதுடன், Octa Core Snapdragon 810 Processor மற்றும் பிரதான நினைவகமாக 3GB RAM, 16GB அல்லது 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை(Megapixel) உடைய பிரதான கமெரா, 2.1 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா போன்ற வசதிகளும் உள்ளன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply