எள்ளு சாதம்

Loading...

எள்ளு சாதம்
தேவையானவை:
அரிசி – 250 கிராம், எள்ளு – 50 கிராம், மிளகாய் வற்றல் – 2, உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
அரிசியை ஒரு பங்குக்கு மூன்று பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, மூன்று விசில் வந்ததும் இறக்கவும். வெறும் கடாயில் எள்ளு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றலை வறுத்து, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். சாதத்துடன் இந்தப் பொடியை சேர்த்து எண்ணெய் விட்டு கலந்து சாப்பிடலாம்.


குறிப்பு:
இதற்கு தயிர் பச்சடி சிறந்த காம்பினேஷன். எள் எலும்புக்கு வலிமை தரும். எள் உருண்டையும் தயாரித்து சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply