என்றென்றும் இளமையாக ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்

Loading...

என்றென்றும் இளமையாக ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்

பெண்கள் அதிகம் மெனக்கெடுவது அழகுக்காக தான், மற்றவர்கள் மத்தியில் வசீகரிக்கும் தோற்றத்துடன் வலம்வரவேண்டும் என்றே கருதுகிறார்கள்.

இதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று கஷ்டப்படத் தேவையில்லை, வீட்டிலேயே எளிய முறைகளின் மூலம் அழகாக தோற்றமளிக்கலாம்.

* 1 டீஸ்பூன் தேனில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவ வேண்டும்.

20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமம் புத்துணர்ச்சியாக இருப்பதுடன் பொலிவாகவும் இருக்கும்.

* நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

15 நிமிடம் கழித்து கழுவினால் முதுமைக் கோடுகள் மறைந்து மென்மையாக இருக்கும்.

* 1 டேபிள் ஸ்பூன் தேனுடன் 1 டீஸ்பூன் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, முகத்தில் தடவ வேண்டும்.

15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சுருக்கங்கள் மறைந்து விடும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply