எனர்ஜி லட்டு

Loading...

எனர்ஜி லட்டு
தேவையானவை:
பாதாம் – ஒரு கப், முந்திரி – ஒரு கப், பேரீச்சம்பழம் – கால் கப், உலர்ந்த திராட்சை – கால் கப், பால் பவுடர் – ஒரு கப், பொடித்த வெல்லம் – சிறிதளவு, நெய் – தேவைக்கேற்ப, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, உலர் அத்திப்பழம் – ஒன்று.


செய்முறை:
பாதாம், முந்திரியை சிறிய துண்டுகளாக்கவும். பேரீச்சையை விதை நீக்கி சிறிய துண்டுகளாக செய்துகொள்ளவும். உலர் அத்திப்பழத்தையும் சிறிதாக வெட்டிக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் பாதாம், முந்திரி, பேரீச்சம்பழத் துண்டுகள், அத்திப்பழத் துண்டுகள், ஏலக்காய்த்தூள் உலர்ந்த திராட்சை, பால் பவுடர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வெல்லத்தை பொடியாக்கி இந்தக் கலவையில் சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் நெய்யை சூடாக்கி செய்து வைத்த கலவையில் சிறிது சிறிதாக விட்டு, உருண்டைகளாக உருட்டி பயன்படுத்தவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply