உளுந்து தட்டை

Loading...

உளுந்து தட்டை
தேவையானவை:
இட்லி புழுங்கல் அரிசி – இரண்டரை கப், பச்சரிசி – ஒன்றரை கப், காய்ந்த மிளகாய் – 10 (அல்லது காரத்துக்கேற்ப), உளுந்துப்பொடி (சலித்தது) – அரை கப், வெள்ளை எள் – அரை டீஸ்பூன், ஊறவைத்த கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.


செய்முறை:
புழுங்கல் அரிசி, பச்சரிசியை ஒன்றாகச் சேர்த்துக் கழுவி, காய்ந்த மிளகாய் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். உளுந்துப் பொடியை, அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்துக் கலந்து… எள், ஊறவைத்த கடலைப்பருப்பு சேர்த்துக் கலக்கவும். கையில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு, மாவை எடுத்து, பிளாஸ்டிக் ஷீட் (அ) வாழை இலையில் மெல்லிய தட்டைகளாக தட்டி, உலர்ந்த துணியில் போடவும். 10 நிமிடத்துக்குப் பிறகு தட்டைகளை சூடான எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply