உலாவியில் தவறாக அழித்த புக் மார்க் கோப்புகளை திரும்ப பெறுவதற்கு

Loading...

உலாவியில் தவறாக அழித்த புக் மார்க் கோப்புகளை திரும்ப பெறுவதற்குஇன்டர்நெட் உலாவியில் புக்மார்க்குகள் முக்கிய இடம் வகிக்கின்றன. நாம் அடிக்கடி செல்ல விரும்பும், முக்கிய தளம் எனக் கருதும் தளங்களுக்கான முகவரிகளைக் குறித்து வைப்பதே புக்மார்க்.

ஒவ்வொரு முறையும், தள முகவரியினை டைப் செய்திடாமல் இந்த புக்மார்க்குகளில் கிளிக் செய்து தளத்தினைப் பெறலாம். இவ்வளவு முக்கிய புக்மார்க்குகளைத் தவறுதலாக அழித்துவிட்டால் என்ன செய்வது? திரும்பப் பெறும் வழிகள் எவை? இங்கு பார்க்கலாம்.

குரோம் மற்றும் பயர்பொக்ஸ் உலாவியில் அழிக்கப்பட்ட, நீக்கப்பட்ட, புக்மார்க்குகளைத் திரும்பப் பெறும் வழிகள் தரப்பட்டுள்ளன. குரோம் உலாவியில் இது சற்று கடினமான வழியாக அமைக்கப்பட்டுள்ளது.

புக்மார்க்குகளுக்கான பக் அப் கோப்பு சிறிய, மறைத்து வைக்கப்பட்ட கோப்பாக குரோம் உலாவியில் உள்ளது. இதனை நாமாகத்தான் தேடிக் கொண்டு வர வேண்டும். இந்த கோப்பு அடிக்கடி இதன் மேலாகவே எழுதப்படுகிறது.

பயர்பொக்ஸ் உலாவியில் இது மிக எளிது. பயர்பொக்ஸ் புக்மார்க் மேனேஜர் பிரிவில், அழிக்கப்பட்ட புக்மார்க்கினை உடனடியாக மீட்க ஒரு “undo” வசதி தரப்பட்டுள்ளது. உலாவியும் தானாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் புக்மார்க்குகளை பக் அப் செய்கிறது.

இந்த பக் அப் கோப்பை பல நாட்கள் பயர்பொக்ஸ் வைத்துக் காக்கிறது. இதனை எப்போது வேண்டுமானாலும், நாம் எளிதாக எடுத்துக் கொள்ளலாம். மறைக்கப்பட்ட கோப்பறைகளை தேடி அலைந்து தோண்டி எடுக்கும் வேலை எல்லாம் இதில் இல்லை.

குரோம் உலாவியின் புக்மார்க் மேனேஜரில் “undo” ஆப்ஷன் இல்லை. இதில் உள்ள export ஆப்ஷனைப் பயன்படுத்தி ஏற்கனவே இதன் பக் அப்பினை நீங்கள் தயாரித்து வைத்திருந்தால், அவற்றை import செய்து மீண்டும் பெறலாம். ஆனால் இந்த பக் அப்பிற்குப் பின்னால் ஏற்படுத்திய புக்மார்க்குகள் கிடைக்காது.

குரோம் உலாவி உங்கள் புக்மார்க் கோப்பினை ஒரே ஒரு பக் அப் கோப்பாக பராமரிக்கிறது. ஒவ்வொரு முறை குரோம் உலாவியை இயக்கும் போதும் அது, அந்த பக் அப் கோப்பை மீண்டும் எழுதிக் கொள்கிறது.

எனவே புக்மார்க் கோப்பு உள்ள போல்டரை அழித்துவிட்டால், குரோம் உலாவியை மூடக் கூடாது. மீண்டும் இயக்கக் கூடாது. அப்படி இயக்கினால், பக் அப் கோப்புகள் புக்மார்க்குகள் அழிக்கப்பட்ட நிலையில் எதுவும் திரும்பக் கிடைக்காது. அப்படியானால் என்ன செய்யலாம்? இங்கு பார்க்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறக்கவும். அதன் அட்ரஸ் பாரில் கீழ்க்காணும் முகவரியை டைப் செய்திடவும். இதில் NAME என்ற இடத்தில், உங்களின் விண்டோஸ் யூசர் அக்கவுண்ட் பெயரை எழுதவும்.

C:UsersNAMEAppDataLocalGoogleChromeUser DataDefault இந்த போல்டரில் இரண்டு புக்மார்க் கோப்பு இருக்கும். அவை Bookmarks and Bookmarks.bak. இதில் இரண்டாவதாகத் தரப்பட்டுள்ளது (Bookmarks.bak) அண்மைக் காலத்திய பக் அப் கோப்பு. நீங்கள் இறுதியாக குரோம் பிரவுசரைத் திறந்த போது, பிரவுசரால் உருவாக்கப்பட்ட பேக் அப் பைல்.

இந்த போல்டரில் .bak என்ற எக்ஸ்டன்ஷன் பெயருடன் எந்த பைலும் இல்லாமல், Bookmarks என்ற பெயரில் இரண்டு கோப்புகள் இருந்தால், பைல்களுக்கான துணைப் பெயர் மறைக்கப்படும் வகையில் செட் செய்யப்பட்டுள்ளது என்று பொருள்.

இந்தக் குழப்பத்தினை நீக்க, rganize மெனுவில் கிளிக் செய்திடவும். இதில் “Folder and search options.” என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். போல்டர் ஆப்ஷன்ஸ் விண்டோவில், View டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Hide extensions for known file types” என்ற வரியில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை எடுத்து விடவும்.

இப்போது, மேலே கூறப்பட்ட இரண்டு புக்மார்க் பைல்களில் இறுதியாக உருவாக்கப்பட்ட பக் அப் கோப்பு அதற்கான எக்ஸ்டன்ஷன் பெயருடன் காட்டப்படும். இந்த பக் அப் கோப்பை மீட்டுக் கொண்டு வர, குரோம் உலாவியின் அனைத்து விண்டோக்களையும் மூடவும். குரோம் உலாவி மூடப்பட்ட நிலையில், Bookmarks கோப்பை அழிக்கவும்.

Bookmarks.bak என்ற கோப்பை Bookmarks என பெயர் மாற்றம் செய்திடவும். இனி மீண்டும் குரோம் உலாவியை இயக்கினால், நீங்கள் அழித்த புக்மார்க் கோப்பை காணலாம். நீங்கள் இறுதியாக குரோம் உலாவியை திறந்து இயக்கிய போது உருவாக்கிய புக்மார்க்குகள் மட்டும் அங்கு கிடைக்காது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply