உருளை மசாலா கிரேவி

Loading...

உருளை மசாலா கிரேவி

தேவையானவை:
உருளைக்கிழங்கு – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 2, தயிர் ஒரு கப், காய்ந்த மிளகாய் – 6, தனியா, மிளகு – தலா ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் – தலா 2, இஞ்சி – சிறிய துண்டு, கொத்தமல்லித்தழை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய், தோல் சீவிய இஞ்சி ஆகியவற்றை வெறும் வாணலியில் சூடுபட வறுத்து, பிறகு ஆறவைத்து மிக்ஸியில் பொடிக்கவும்.
தோலுரித்த உருளையை முள் கரண்டியால ஆங்காங்கே குத்தி உப்பு சேர்த்த தயிரில் அரை மணி நேரம் ஊறவிடவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் தயிரில் ஊறிய உருளைக்கிழங்கை அதில் சேர்த்து, சிறிது நீர் சேர்த்து நன்கு கொதித்ததும், மிக்ஸியில் பொடித்த பொடியைத் தூவி மேலும் ஒரு கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply