உருளை – காலிஃப்ளவர் சீஸ் கிராக்கெட்ஸ்

Loading...

உருளை - காலிஃப்ளவர் சீஸ் கிராக்கெட்ஸ்
தேவையானவை:
காலிஃப்ளவர் – மீடியம் சைஸ், உருளைக்கிழங்கு – 2, துருவிய சீஸ் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 4 பல், மைதா – 4 டேபிள்ஸ்பூன், பிரெட் தூள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
காலிஃப்ளவரை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்றையும் விழுதாக அரைக்கவும்.
காலிஃப்ளவரை 2 நிமிடம் கொதிக்கும் நீரில் போட்டு எடுக்கவும். இதனுடன் மசித்த உருளை, துருவிய சீஸ், அரைத்த பச்சை மிளகாய் விழுது, உப்பு, 2 டேபிள்ஸ்பூன் மைதா சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவம் கொடுக்கவும். இதுதான் சீஸ் கிராக்கெட்ஸ். மீதமுள்ள 2 டேபிள்ஸ்பூன் மைதாவைச் சற்று நீர்க்கக் கரைத்து அதில் சீஸ் கிராக்கெட்ஸை தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித் தெடுத்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply