உணவில் தேவையான சத்துகள்

Loading...

உணவில் தேவையான சத்துகள்
1.
இரும்புச் சத்து இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு எவ்வளவு உள்ளது என்பதைப் பரிசோதித்துப் பாருங்கள். பெண்களுக்கு 12.5% கிராமும் ஆண்களுக்கு 14.5% கிராம் இருப்பது அவசியம். 10% கிராமிற்குக் கீழே இருந்தால் மருத்துவரின் ஆலோசனையோடு இரும்புச் சத்து நிறைந்த டானிக்குகள் அல்லது மாத்திரைகளையும் உண்பது அவசியம். இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகள்: கல்லீரல், பசலைக்கீரை, முருங்கைக்கீரை, மாதுளை, பப்பாளி, பேரிச்சம்பழம், உலர்ந்த திராட்சை, பூசணி விதை, பாதாம் பருப்பு, முட்டை, காலிஃபிளவர்.
2 .
பி காம்ப்ளெக்ஸ் அனைத்து பி.காம்ப்ளெக்ஸ் சத்துக்களும் கேச வளர்ச்சிக்கு அவசியம் எனினும், பயாட்டின் அயனோசிட்டால் ஆகிய இரண்டு சத்துக்கள் மிக மிக அவசியமானவை. பயாட்டின் அதிகமுள்ள உணவு வகைகள்: கைக்குத்தல் அரிசி, பார்லி, ஓட்ஸ், சோயா பீன்ஸ், வேர்க்கடலை, காலிஃபிளவர், காளான், பாதாம் பருப்பு. அயனோசிட்டால் அதிகம் உள்ள உணவு வகைகள்: கல்லீரல், ஈஸ்ட், உலர்ந்த திராட்சை, முளைவிட்ட தானியங்கள், முட்டைகோஸ், வேர்க்கடலை.
3.
அயோடின் அயோடின் சத்து தலையிலுள்ள தோலுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி கேசவேர்களை உறுதியடையச் செய்து கேசம் உதிருவதைத் தடுக்கிறது. அயோடின் அதிகம் உள்ள உணவு வகைகள்: அயோடின் கலந்த உப்பு, கடல் உணவுகள் (மீன் நண்டு இறால்), பசலைக்கீரை.
4.
தாமிரம் தாமிரச் சத்து கேச வேர்களை உறுதியாக்குவதோடு கேச வளர்ச்சியையும் அதிகரிக்கிறது. தாமிரம் அதிகமுள்ள உணவுகள் : கல்லீரல், கடல் நண்டு, சிப்பி, உலர்ந்த பருப்பு, கொட்டை வகைகள், கீரைகள்.
5.
துத்தநாகம் துத்தநாகம் உடலில் சேரும் கழிவுப் பொருட்களை அகற்றி இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதோடு இரத்த ஓட்டத்தையும் அதிகரிப்பதால் கேசம் உறுதியடைகிறது. துத்தநாகம் அதிகமுள்ள உணவு வகைகள்: துவரம் பருப்பு, கிட்னி பீன்ஸ், உளுந்து, முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, பாதாம்.
6.
வைட்டமின் ‘சி’ வைட்டமின் சி சத்து கேச வேர்களைத் தாக்கும் நோய்களிலிருந்து விடுதலையளிக்கும். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு ரத்த ஓட்டத்தையும் சீர் செய்யும். வைட்டமின் சி அதிகமுள்ள உணவு வகைகள்: எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா, அன்னாச்சி, பப்பாளி, நெல்லிக்காய், முருங்கக்கீரை, முட்டைகோஸ்.
7.
தண்ணீர் கேசவேர்கள் உறுதியாகவும், அவற்றிற்கான இரத்த ஓட்டம் சீராக இருக்கவும் தினசரி 10&லிருந்து 12 டம்ளர்கள் நீர் அருந்துவது அவசியம். உங்கள் உணவு முறைகளில் மாற்றம் செய்யுங்கள். கேசம் உதிருவது கணிசமாகக் குறையும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply