உணர்ச்சியை அறியும் செயற்கை முதுகெலும்பு உருவாக்கம்

Loading...

உணர்ச்சியை அறியும் செயற்கை முதுகெலும்பு உருவாக்கம்முள்ளந்தண்டு எலும்பு பாதிக்கப்பட்டு உணர்ச்சியை இழந்து தவிக்கும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் பயோனிக் முள்ளந்துண்டு செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த முள்ளத்தண்டினை இரத்த நாளங்களுக்கு இடையில் பொருத்த முடிவதுடன் மூளைக்கு இலத்திரனியல் சமிக்ஞைகளை கடத்தக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

3 சென்றி மீற்றர்கள் நீளமான இந்த முள்ளந்தண்டினை நோயாளியின் கழுத்துப் பகுதியில் சத்திரசிகிச்சையினை மேற்கொள்வதன் மூலம் பொருத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உணர்ச்சிகளை அறிய முடிவதுடன், இயக்கத்திற்கு தேவையான சமிக்ஞைகளை கடத்தக்கூடியதாகவும் இருக்கும் எனவும், 2017ம் ஆண்டு முதல் இந்த பயோனிக் முதுகெலும்பு பயன்படுத்தி சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமுறை அறிமுகமாகும் எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply