உடம்பு ஸ்லிம்மா அழகா இருக்க…உபயோகமான தகவல்கள்

Loading...

உடம்பு ஸ்லிம்மா அழகா இருக்க...உபயோகமான தகவல்கள்**தேவையில்லாத சதைகளைக் குறைக்க சில வழிகள்:

இன்றைய பெண்கள் முன்பு போல் அம்மி அரைப்பதில்லை, உரல் வைத்து மாவு ஆட்டுவதில்லை (என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்). இது எல்லாம் செய்வதில்லை. உடம்பு மட்டும் ஸ்லிம்மா இருக்கணும் என்று ஆசைப்படுகிறோம்.

*மெலிந்த உடம்பை பெருக்க வைப்பது மிகவும் சுலபம். ஆனால் அதிகப்படியான சதைகளைக் குறைப்பது தான் மிகவும் சிக்கல். உடலின் தேவையில்லாத எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்:-


***தவிர்க்க வேண்டியவைகள்:

1. முதலில் அதிக நேரம் தொலைக்காட்சி பெட்டியின் முன்போ அல்லது இப்படி ஏதாவது பதிவு போடணும் என்றோ கம்ப்யூட்டர் முன்பு உட்காராதீங்க.

*2. அதிகமாக நொருக்கு தீனி சாப்பிடாதீங்க.

*3. உங்களுக்கு மிகவும் பிடித்த ஆயில் உணவுகளையும், பொழுப்பு நிறைந்த .. பிட்ஸா, பர்கரையும் மறந்துவிடவும்.

*4. வீட்டுக்கு வேலைக்கு ஆள் வந்தால், உங்கள் உடல் ஆரோக்கியத்தை எண்ணிக்கொண்டு யோசிக்கவும்.

*5. மதியம் தூக்கம் கட்டாயம் வேண்டாம்.

***அதிகப்படியான சதைகளை குறைக்க சில பயிற்சிகள்


இடுப்பில்:

1. பெண்களுக்கு அதிக சதை போடுவதே இடுப்பில் தான். அவங்க கட்டாயம் இடுப்புக்கு பயிற்சி கொடுக்கணும்.

*2. நல்ல நடைபயிற்சி மிக முக்கியம்.

*3. நல்லா டான்ஸ் ஆடுங்க. (ஆட தெரியவில்லை என்றாலும் இடுப்பை வளைத்து கால் கைகளை மடக்கி டான்ஸ் என்ற பெயரில் ஆடவும்.)

*4. நேராக நின்றுக்கொண்டு 2 கைகளையும் மேலே தூக்கி அப்படியே ஒரு கைகளை மட்டும் கீழே கொண்டு வரும்பொழுது இடுப்புடன் உடலையும் வளைக்கவும். இதை போல் 2 பக்கமும10 முறை செய்யவும்.

*5. இதன் மூலம் இடுப்பின் மடிப்பு மற்றும் சதை குறையும்.

*6. எந்த வேலை செய்யும் பொழுதும் வயிற்றை நல்லா உள் இழுத்து விடவும். இப்படி அடிக்கடி செய்தால் வயிற்று பகுதியின் சதை குறையும்.

*7. தரையில் படுத்துக்கொண்டு கால்களை முட்டியினை மடக்காமல் தூக்கி இறக்கவும். 2 கால்களையும் 10 முறை செய்யவும்.


***இடுப்பு மற்றும் தொடைக்கு:

1. சிலருக்கு பின் பகுதி மட்டும் அழகில்லாமல் இருக்கும். தினமும் குறைந்தது 10முறையாவது மாடிப்படி ஏறி இறங்கவும்.

*2. நின்றுக் கொண்டு கால்களின் முட்டியினை மட்டும் தூக்கி இறக்கவும். அடிக்கடி செய்யவும்.

*3. நன்றாக நடக்கவும். அப்ப தான் இடுப்புத்தொடை உறுதியாக்கும்.


***கைகளுக்கு:

1. இதுக்கு நல்ல உடல்பயிற்சி வீட்டு வேலைகளை சரியாக செய்வது தான். அம்மி அரைக்கவும், கிணற்றில் தண்ணீர் எடுக்கவும், பம்பில் தண்ணீர் அடிக்கவும். இதுவே நல்ல பயிற்சி. முடியாதவங்க செய்வது போல் பாவனை செய்யுங்கள். அது தான் பயிற்சி.


***கழுத்துக்கு கீழ் தொங்கும் சதை:

*1. சிலரின் அழகை கெடுப்பது கழுத்தின் மடிப்பு சதை.
இதுக்கு கழுத்தை மேலும் கீழுமாக தலையினை மாற்றி மாற்றி 10 முறை செய்யவும்.

*2. முகத்தை இட-வலமாக மாற்றி மாற்றி திருப்பவும்.

*3. முறையான நடைபயிற்சி, நீச்சல் பயிற்சி, ஜாக்கிங், சைக்கள் ஓட்டுவது போன்ற உடல்பயிற்சிகள் செய்வது ரொம்ப நல்லது…

*தொடர்ந்து செய்யுங்கள் பலன் நிச்சயம்…..

Loading...
Rates : 0
VTST BN