உங்கள் உடலில் புரதச்சத்து குறைவாக இருப்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகள்!

Loading...

உங்கள் உடலில் புரதச்சத்து குறைவாக இருப்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகள்!புரதச்சத்து என்பது மிக முக்கிய ஊட்டச்சத்தாகும். ஆனால் இன்றைய காலத்தில் நம்மில் பெரும்பாலானவர்களின் உணவில் அதன் தட்டுப்பாடு உள்ளது. ஹார்மோன் மற்றும் நொதிகளின் சுரத்தல்; தசை, எலும்புகள், தோல், முடி மற்றும் மூளை போன்றவைகளின் வளர்ச்சி, போன்ற உடல் செயல்பாடுகளுக்கு புரதம் உதவும்.
என்ன பிரச்சனை என்றால் நம் உடலில் புரதம் குறைவாக உள்ளதா என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிவதில்லை. புரத குறைபாட்டின் அறிகுறிகளை நாம் புறக்கணித்தும் விடுவோம். உடல் எடை அதிகரிப்பு அதற்கு ஒரு உதாரணமாகும். நம் உடல் எடை அதிகரிக்கும் போது, உடலில் உள்ள புரதத்தின் அளவை சோதிக்காமல், உடல் எடையை குறைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து வருவோம்.
குறைந்தளவிலான புரதத்தால் உடல் எடை அதிகரிப்பு ஏற்படும். மெட்டபாலிசம் குறைவதே அதற்கான காரணமாகும். சில நேரங்களில் மன செறிவு பற்றாக்குறையும் சோர்வும் உண்டாகும். ஆனால் நாமோ நம் வேலைப்பளுவை இதற்கு காரணமாக காட்டுவோமே தவிர, உடலில் புரதம் பற்றாக்குறையாக உள்ளது என்பதை அறிய மாட்டோம். உடலில் புரதம் பற்றாக்குறையாக இருப்பதால் பல்வேறு உடல்நல கோளாறுகளும் ஏற்படும்.
குறைந்த இரத்த சர்க்கரை அளவு மற்றும் சோர்வு என புரதம் குறைபாடு பல்வேறு நேரடியல்லாத அறிகுறிகளால் வெளிப்படும். குறைந்த புரத அளவினாலும் கூட இவைகள் ஏற்படலாம். உங்கள் உடலில் புரதம் குறைவாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

உணவுகளுக்காக ஏங்குதல்

உடலில் புரதத்தின் அளவு குறைவாக இருந்தால், ஊட்டச்சத்துக்கள் அல்லாத, ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணுவதற்காக நாம் ஏங்குவோம். இத்தகைய உணவுகளில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். மிட்டாய்கள், சாக்லேட்கள், பாஸ்தா, சிப்ஸ், குளிர் பானங்கள் போன்றவைகள் இதற்கான சில உதாரணங்கள். அத்தகைய உணவுகளை உட்கொள்ள நீங்கள் ஏங்கினால், உங்கள் உடலில் புரதத்தின் அளவுகள் குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.

மூட்டு மற்றும் தசை வலி

உடலில் போதிய அளவில் புரதம் இல்லாத போது, மூட்டு வலியும் தசை வலியும் ஏற்படலாம். மூட்டுக்களில் உள்ள திரவத்தில் பெரும்பாலும் புரதங்களே அடங்கியுள்ளது. இந்த திரவம் மூட்டுகளுக்கு உயவூட்டி, தசைகளை மறுபடி வளர்ச்சியடையச் செய்யும். புரத குறைபாடு இருக்கும் போது இந்த திரவத்தின் உற்பத்தி குறைந்துவிடும். இதனால் மூட்டு மற்றும் தசை வலி உண்டாகும்.

குறைந்த ஆற்றல் திறனும்.. சோர்வும்.

உடலில் புரத குறைபாடு இருந்தால், இரத்த சர்க்கரை அளவு குறைந்து, மனநிலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். இதனால் சுலபத்தில் எரிச்சல் அடைவோம், நம் நடவடிக்கைகளில் மன ரீதியான தளர்வைப் பெறுவோம். உடல் ரீதியான மற்றும் மன ரீதியான அழுத்தத்தை நம் உடலால் தாங்கி கொள்ள முடியாமல் போகும். மேலும் நம் செறிவுத்தன்மையும் குறையும். குறைந்த சர்க்கரை அளவினால், உடல் சோர்வடையும்.

தூக்கமின்மை

நம் உடலில் புரதம் குறைவாக இருந்தால், தூக்கம் வருவதில் சிரமம் ஏற்படும். மேலும் பாதி இரவில் விழித்துக் கொள்வீர்கள். அதற்கு காரணம், சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் மீதான நம் உடலின் ஏக்கம் தான். இது மூளையை அமைதி பெறச் செய்யாது.

அடிக்கடி உடல் சுகவீனம் அடைதல்

உடலில் புரதச்சத்து குறைவாக இருந்தால், தொடர்ச்சியாக ஒன்றின் பின் ஒன்றாக சுகவீனங்கள் உண்டாகும். நம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே அதற்கு காரணம். ஏனென்றால் தொற்றுக்களை எதிர்க்கும் பொறுப்பைக் கொண்டுள்ளவை புரதத்தால் ஆனவை. புரதம் குறைவாக இருப்பதால், உடல் தொற்றுக்களை எதிர்த்து போராடும் வெள்ளை இரத்த அணுக்களும் குறையும். ஆகவே நீங்கள் அடிக்கடி நோய்வாய் பட்டால், அதற்கு குறைவான புரதமும் காரணமாக இருக்கலாம்.

பலவீனமான மூளை செயல்பாடு

உடலில் தேவையான அளவில் புரதம் இல்லாத போது மூளையும் மெதுவாக செயல்படும். நரம்பியக்கடத்திகள் மற்றும் மூளையின் பிற இரசாயன வாங்கிகளும் புரதத்தால் ஆனவை என்பதே அதற்கு காரணம். அளவுக்கு அதிகமாக புரதத்தை உட்கொண்டால், நம் மூளை டோபமைன் என்ற ரசாயனத்தை அதிகமாக சுரக்கும். இது மன செறிவை அதிகரித்து, சிறப்பாக வேலை செய்ய உதவிடும்.

உடல் எடை அதிகரிப்பு

உங்கள் உடல் எடை அதிகரிக்கிறதா? உங்கள் உணவில் புரதத்தின் அளவு குறைவாக இருந்து, கார்போஹைட்ரேட்டின் அளவு அதிகமாக இருக்கலாம். புரதம் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இது தசையை வளர்த்து, கொழுப்புகளை எரிக்க உதவும். அதனால், கட்டுக்கோப்புடன், ஆற்றல் திறனுடன், மன ரீதியாக திடமாக இருக்க, உங்கள் உணவில் புரதத்தை போதிய அளவில் சேர்த்துக் கொள்ளவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply