ஈர்ப்பு அலைகள் கண்டுபிடிப்பு: நூறு ஆண்டுகள் கழித்து நிரூபிக்கப்பட்ட ஐன்ஸ்டீன் கூற்று

Loading...

ஈர்ப்பு அலைகள் கண்டுபிடிப்பு நூறு ஆண்டுகள் கழித்து நிரூபிக்கப்பட்ட ஐன்ஸ்டீன் கூற்றுபுவி ஈர்ப்பு அலைகள் எவ்வாறு உருவாவுகின்றன என்பதை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

கடந்த 1915 ஆம் ஆண்டு ஈர்ப்பு விசை குறித்த சார்பியல் தத்துவத்தை இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் வகுத்தார். அதில் ஈர்ப்பு அலைகள் குறித்த சில கருத்துகளையும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனை அடிப்படையாகக் கொண்டு பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் இந்திய விஞ்ஞானிகள் ஈர்ப்பு விசை குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விண்வெளி பாதையில் உள்ள இரண்டு கரும்புள்ளிகள் (Black Holes) இணைவதன் மூலம் புவி ஈர்ப்பு அலைகள் உருவாகுவதாக அமெரிக்காவின் சர்வதேச விண்வெளி இயற்பியல் விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

அதாவது, விண்வெளி பாதையில் உள்ள இரண்டு கரும்புள்ளிகள் இணைவதன் மூலம் ஈர்ப்பு அலைகள் அல்லது சிற்றலைகள் தோன்றுகின்றன, இவைகள் அரை ஒளிவேகத்தில் ஒன்றுடன் ஒன்று இணைகின்றன என கண்டுபிடித்துள்ளனர்.

பூமியில் இருந்து சுமார் 1.3 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு தொலைவில் இந்த ஈர்ப்பு அலைகள் உருவாகுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் அண்டம் தோன்றிய விதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், பிரபஞ்சத்தின் தோற்றத்தில் மறைந்துள்ள பல மர்மங்களை கண்டறியவும் இது துணைபுரிகின்றது என கூறப்படுகிறது.

மேலும் இந்த நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்பது இது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஐன்ஸ்டீனின் கணிப்புகள் உண்மை என்பது நூறு ஆண்டுகள் கழித்து தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஈர்ப்பு அலையை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply