இறால் சில்லி 65 (Shrimp Chilli Fry)

Loading...

இறால் சில்லி 65 (Shrimp Chilli Fry)


தேவையானவை :

இறால் – அரை கிலோ

அரிசிமாவு – 2 கை

சோளமாவு – 1 கை

மைதா – 1 கை

முட்டை – 1

இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

எலுமிச்சம் பழச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்

சீரகப்பொடி – அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை – 1 கொத்து

காய்ந்த மிளகாய் – 3 தேக்கரண்டி (அரைத்தது)

மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி

தனியாத்தூள் – 1 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு


செய்முறை :

1. இறாலைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த அரிசி மாவு, சோளமாவு, மைதா, மஞ்சள்தூள் அரைத்த மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, தனியாத்தூள், சீரகப்பொடி, கறிவேப்பிலை, தேவைக்கேற்ப உப்பு, எலுமிச்சம் பழச்சாறு அனைத்தையும் நீர் தெளித்து பேஸ்ட் பதத்தில் பிசைந்து கொள்ளவும். இறாலை இக்கலவையில் புரட்டி காய்ந்த எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply