இயற்கையாக கண் இமைகள் வளர வேண்டுமா?

Loading...

இயற்கையாக கண் இமைகள் வளர வேண்டுமாபெண்களுக்கு முகத்தை அழகாக காட்டுவதில் கண்களுக்கும் பங்குண்டு. அக்காலத்தில் அழகான பெண்கள் என்றால் கண்கள் பெரிதாகவும், இமைகள் சற்று நீளமாகவும் இருந்தால் அவர்களே அழகானவர்கள். மேலும் அந்த கண் இமைகள் கண்களை தூசிகளிலிருந்து பாதுகாக்கிறது. அப்படிப்பட்ட அந்த கண் இமைகள் சிலருக்கு அடர்த்தி இல்லாமல் இருக்கும். இதற்காக அவர்கள் கடைகளில் விற்கும் செயற்கையான கண் இமைகளை வாங்கி பொருத்திகொள்கின்றனர். அப்படி செய்வதற்கு நாம் வீட்டிலேயே இயற்கையான முறையில் கண் இமைகளை அழகாகவும், நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர்க்கலாம்.


கண் இமைகள் வளர சில டிப்ஸ்…

ஆமணக்கெண்ணை ஒரு மருத்துவகுணம் வாய்ந்த பொருள். தினமும் ஆமணக்கெண்ணையை உறங்கும் முன் கண் இமைகள் மீது தடவவும். வேண்டுமென்றால் ஆமணக்கெண்ணையை வெதுவெதுப்பாக சூடேற்றி கூட தடவலாம். இவ்வாறு தொடர்ந்து இரண்டு மாதங்கள் தடவிவர, கண் இமைகளானது நன்கு வளர்ந்து ஆரோக்கியத்துடன் காணப்படும்.

தினமும் கண் இமைகளை தலை சீவும் சீப்பை வைத்து சீவினால் முடியானது நன்கு வளரும். அந்த சீப்பை விட்டமின் ஈ எண்ணெயில் நனைத்து சீவலாம். வேண்டுமென்றால் விட்டமின் ஈ மாத்திரைகளை பொடியாக்கி, எண்ணெய்வைத்து பேஸ்ட் போல் செய்து தடவலாம். இதானால் கண்களில் எந்த அரிப்பும் வராது. மேலும் எதனை தினமும் செய்தல் முடி கொட்டாமல், முடியானது நன்கு வளரும்.

தினமும் இமைகளை சுத்தமான சீப்பால் சீவ வேண்டும். அப்படி சீவும் சீப்பை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். சீப்பானது சிறிதாகவும் இருக்கலாம் அல்லது மஸ்காரா பிரஸ் வைத்து சீவலாம்.அதிலும் ஏதேனும் ஒரு இயற்கை எண்ணெயில் நனைத்து சீவினால் நல்லது. கண் இமைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது சீவ வேண்டும்.

ஆமணக்கெண்ணை/விட்டமின் எண்ணெய் கிடைக்காதவர்கள் வஸ்லினை பயன்படுத்தலாம். இது ஒரு சிறந்த நன்மையை தரும். இரவில்படுக்கும் முன் கண் இமைகள் மீது வஸ்லினை தடவி, காலையில் வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவிவிட வேண்டும்.

நல்ல ஆரோக்கியமான புரோடீன் நிறைந்த உணவை உண்ண வேண்டும். இதனால் மிகவும் அழகான, அருமையான கண் இமைகளைப்பெறலாம். நம் உடலில் உள்ள தோல், முடி, நகங்கள், ஏன் கண் இமைகளுக்குக் கூட தினமும் புரோடீன் உணவை உண்ணவேண்டும். மீன், பருப்புவகைகள், நட்ஸ் மற்றும் புரோடீன் நிறைந்த உணவுகளை தினமும் உணவில் சேர்க்கவேண்டும். இப்படி எல்லாம் செய்தால் கண் இமை முடியானது அழகாக, அடர்த்தியாக, நீளமாக வளரும். ஆனால் இதற்கு நிறைய பொறுமை வேண்டும். மேலும் இவற்றைஎல்லாம் தினமும் செய்யவேண்டும், இதனால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply