இனிப்பு இட்லி

Loading...

இனிப்பு இட்லி
தேவையானவை:
புழுங்கல் அரிசி – 2 கப், உளுத்தம்பருப்பு – அரை கப், தூள் செய்த கருப்பட்டி – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, நெய்யில் வறுத்த பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – கால் கப், நெய் – சிறிதளவு, ஆப்ப சோடா, உப்பு – ஒரு சிட்டிகை.


செய்முறை:
புழுங்கல் அரிசி, உளுத்தம்பருப்பை தனித்தனியே ஊற வைத்து, உளுந்தை பொங்கப் பொங்கவும், அரிசியை நைஸாகவும் அரைத்து, இரண்டையும் ஒன்றுசேர்த்து, சிட்டிகை உப்பு சேர்த்துக் கரைத்து நன்கு புளிக்க வைக்கவும். பிறகு, மாவில் தேங்காய் துருவல், நெய், ஏலக்காய்த்தூள், ஆப்ப சோடா, வறுத்த பாசிப்பருப்பு சேர்த்துக் கலக்கவும். கருப்பட்டியில் சிறிது நீர் சேர்த்து கரையவிட்டு, வடிகட்டி, சூடாக்கி அப்படியே மாவில் சேர்க்கவும். இதை நன்கு கலந்து இட்லித்தட்டில் ஊற்றி இட்லிகளாக வார்க்கவும்.

குறிப்பு:
கருப்பட்டிபாகு சேர்த்ததும் மாவு நீர்த்துக் கொள்ளுமென்பதால், மாவு அரைக்கும்போது சற்று கெட்டியாக இருப்பது அவசியம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply