இனிப்பு இடியாப்பம்

Loading...

இனிப்பு இடியாப்பம்
தேவையானவை:
வெல்லம், இட்லி அரிசி – தலா 200 கிராம், தேங்காய் துருவல் – ஒரு கப், நல்லெண்ணெய் ­- ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள், உப்பு – சிறிதளவு.
strong>
இடியாப்பம் செய்முறை: இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, சிறிது உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெயை விட்டு, கரைத்து வைத்து இருக்கும் மாவை ஊற்றி, கெட்டியாகக் கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). மாவு வெந்ததும் நன்கு பிசையவும். மாவை சிறிய பந்து அளவு உருண்டைகளாக உருட்டவும். அகலமான ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, உருண்டைகளைப் போடவும் (உருண்டைகள் மூழ்கும் அளவு தண்ணீர் விடவும்). உருண்டைகள் வெந்ததும் எடுத்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து கொள்ளவும் (உருண்டைகளை சரிபாதியாக ‘கட்’ செய்து பார்த்தால், மாவு வெள்ளையாக தெரியக்கூடாது. அதுதான் சரியான பதம். மாவு தெரிந்தால் மேலும் சிறிது நேரம் வேகவிட வேண்டும்).


செய்முறை:
வெல்லத்தைக் கரைத்து கொதிக்கவிட்டு, வடிகட்டி, பாகு காய்ச்சவும். பாகை தண்ணீரில் விட்டு பார்த்தால் உருட்ட வரவேண்டும் இதுதான் சரியான பதம். பாகு ஆறியதும் இடியாப்பத்தை அதில் சேர்த்து… ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply