இந்த 13 பழக்கவழக்கங்கள் தான் உங்கள் சிறுநீரகங்களை சேதப்படுத்துகிறது என்று தெரியுமா?

Loading...

இந்த 13 பழக்கவழக்கங்கள் தான் உங்கள் சிறுநீரகங்களை சேதப்படுத்துகிறது என்று தெரியுமாசிறுநீரங்கள் தான் உடலில் உள்ள கழிவுப் பொருட்களை சிறுநீரின் வழியே பிரித்து வெளியேற்றுவது. இப்படி கழிவுகளை பிரித்து வெளியேற்றுவதால், அந்த சிறுநீரகங்களின் மூலை முடுக்குகளில் நச்சுக்கள் தங்கி, அதுவே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதைத் தடுக்க சிறுநீரகங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளும் உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் சிறுநீரகங்கள் பாழாவதற்கு நம் அன்றாட பழக்கவழக்கங்களும் ஓர் காரணம். அந்த பழக்கவழக்கங்களைத் தவிர்த்தால் சிறுநீரகங்கள் சேதமடைவதைத் தடுக்கலாம்.
சரி, இப்போது உடலின் மிகவும் முக்கிய உறுப்பான சிறுநீரகங்களைச் சேதப்படுத்தும் நம் பழக்கவழக்கங்கள் என்னவென்று படித்து, அவற்றைத் தவிர்த்து உங்கள் சிறுநீரகங்களை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.
எப்போதுமே சிறுநீரை அடக்கக்கூடாது. அப்படி அடக்கினால், சிறுநீர்ப்பையில் சிறுநீர் நிரம்பி, சிறுநீரகங்களுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுப்பதோடு, நாளடைவில் அது சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும்.
அளவுக்கு அதிகமான உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரித்து, அதனால் சிறுநீரங்களில் அழுத்தம் ஏற்படும். அதனால் தான் உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் அவ்வப்போது சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை சோதிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஏனெனில் உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு முதலில் பாதிக்கப்படுவது சிறுநீரகங்கள் தான்.
காபியில் சிறுநீரகங்களைச் சேதப்படுத்தும் காப்ஃபைன் உள்ளது. மேலும் இது இரத்த அழுத்தத்தை வேகமாக அதிகரித்து, அதன் மூலம் சிறுநீரகங்களுக்கு அழுத்தம் ஏற்பட நேரிடும்.
ஒருவருக்கு தூக்கம் மூலம் தான் உடலுறுப்புக்கள் தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும். குறிப்பாக தூக்கத்தின் போது தான் சிறுநீரக திசுக்கள் புதுப்பிக்கப்படும். ஆனால் அந்த தூக்கம் ஒருவருக்கு போதிய அளவில் கிடைக்காமல் போனால், அதனால் முதலில் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். மேலும் இது ஆய்வுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான மக்கள் தற்போது சரியான அளவில் தண்ணீர் குடிப்பதில்லை. இதனால் நச்சுமிக்க கெமிக்கல்கள் சிறுநீரகங்களிலேயே தங்கி, அதனை சேதப்படுத்த ஆரம்பிக்கும். பின் அந்த டாக்ஸின்கள் இரத்தத்தில் கலந்து, உடலின் இதர உறுப்புக்களையும் சேதப்படுத்தும். எனவே தினமும் குடிக்கும் நீரின் அளவை அதிகரித்து, உடலையும், சிறுநீரகங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
ஆய்வுகளில் சிறுநீரகங்களின் செயல்பாட்டிற்கு வைட்டமின் பி6 மிகவும் முக்கியமானது. இச்சத்து உடலில் குறைவாக இருந்தால், அதனால் சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும். எனவே வைட்டமின் பி6 நிறைந்த கொண்டைக்கடலை, ஆட்டு ஈரல், பழங்கள், உருளைக்கிழங்குகள் போன்றவற்றை அன்றாடம் சிறிது உட்கொண்டு வர இச்சத்து குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
சிறுநீரகங்களின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு மக்னீசியம் அவசியம். ஏனெனில் மக்னீசியம் தான் உடலுக்கு வேண்டிய சத்துக்களை உறிஞ்சவும், கால்சியம் சத்தை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பவும் உதவுகிறது. உடலில் மக்னீசியம் குறைபாடு ஏற்பட்டால், சிறுநீரகங்களில் கால்சியம் படிந்து நாளடைவில் அது சிறுநீரக கற்களை உருவாக்கும்.
சோடா பானங்களிலும் காப்ஃபைன் அதிகம் உள்ளது. இதனை அதிக அளவில் பருகினால், இரத்த அழுத்தம் உடனே அதிகரித்து, அதனால் சிறுநீரகங்கள் பாதிப்பிற்குள்ளாகும். எனவே சோடா பானங்கள் பருகும் பழக்கத்தைத் தவிர்ப்பது சிறுநீரகங்களுக்கு மட்டுமின்றி, உடலுக்கும் மிகவும் நல்லது.
சில நேரங்களில் உடலில் சிறு வலி ஏற்பட்டாலும் நாம் வலி நிவாரணி மாத்திரைகளைப் போடுவோம். ஆனால் இப்படி வலி நிவாரணி மாத்திரைகளை அதிகமாக எடுத்தால், பல்வேறு பக்க விளைவுகளுடன், முதலில் சிறுநீரகங்கள் பாதிப்பிற்குள்ளாகும்.
அதிகப்படியான புரோட்டீனை எடுப்பதால், சிறுநீரகங்களுக்கு கேடு விளையும் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. புரோட்டீனை அதிகமாக எடுப்பதால், சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகமாவதோடு, சிறுநீரகங்களின் செயல்பாடு குறைந்து, நாளடைவில் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். இந்நேரத்தில் நம் உடலுக்கு ஓய்வளிக்காமல், அதிகப்படியான வேலையைக் கொடுக்கும் போது, அதனால் சிறுநீரகங்கள் பாதிப்பிற்குள்ளாகும். மேலும் ஆய்வு ஒன்றிலும் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது ஓய்வு எடுக்காமல் உடலுக்கு தொடர்ந்து வேலைக் கொடுத்தால் சிறுநீரக நோய்களால் அவஸ்தைப்படக்கூடும் என்றும் தெரிய வந்துள்ளது.
ஆல்கஹாலில் கல்லீரலை மட்டுமின்றி, சிறுநீரகங்களையும் பாதிக்கும் டாக்ஸின்கள் உள்ளன. இதனை அதிகமாக பருகும் போது, சிறுநீரகங்களில் வேலைப்பளு அதிகரித்து, மெதுவாக சிறுநீரகங்கள் பாதிப்படைய ஆரம்பிக்கும். எனவே சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்க ஒரே வழி ஆல்கஹாலை அளவாக பருகுவது தான்.
புகைப்பிடித்தலுக்கும் பெருந்தமனி தடிப்பிற்கும் தொடர்புள்ளது. புகைப்பிடிப்பதால் இரத்த நாளங்களின் சுவர்களில் நச்சுக்கள் படிந்து, இரத்த நாளங்கள் சுருங்கி, உடலுறுப்புக்களுக்கு முக்கியமாக சிறுநீரகங்களுக்கு வேண்டிய இரத்தம் கிடைக்காமல் போகும். ஆய்வு ஒன்றில் ஒரு நாளைக்கு 2 சிகரெட் பிடிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள நாள உட்சவ்வு செல்கள் இருமடங்கு அதிகரித்து, தமனியில் பெரும் சேதத்தை உருவாக்கும் என்று தெரிய வந்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply