இத்தாலியன் சாலட்

Loading...

இத்தாலியன் சாலட்

தேவையானவை:
நறுக்கிய லெட்யூஸ் கீரை (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – 2 கப், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், துருவிய கேரட் – தலா ஒரு கப், நறுக்கிய கலர் குடமிளகாய், வேகவைத்த வேர்க்கடலை, வேகவைத்த கார்ன், நறுக்கிய கொத்தமல்லித்தழை – தலா கால் கப், வால்நட் – ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்.சாலட் அலங்கரிக்க:
ஆலிவ் எண்ணெய் – கால் கப், நறுக்கிய வெங்காயம் – கால் கப், நறுக்கிய வெங்காயத்தாள் – ஒரு டீஸ்பூன், ஆரிகனோ (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் (பொடித்தது), மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப


செய்முறை:
‘சாலட் அலங்கரிக்க’ கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாக கலந்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். வேர்க்கடலை, கார்ன் உடன் உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும். இதனுடன் லெட்யூஸ் கீரை, வெள்ளரிக்காய், கேரட், குடமிளகாய், கொத்தமல்லித்தழை, வால்நட், எலுமிச்சைச் சாறு சேர்த்து… சாலட் அலங்கரிப்பையும் சேர்த்து நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply