இதைத்தான் உண்மையான ‘Enter the Dragon’ என்பதோ?

Loading...

இதைத்தான் உண்மையான ‘Enter the Dragon’ என்பதோஉலகின் முதல் வர்த்தக வழங்கல் கலமான Dragon இற்குள் சனிக்கிழமையன்று நுழைந்தனர் நாசாவின் விண்வெளி நிலைய விண்வெளி வீரர்கள்.

அதற்குள் நுழைந்த முதலாவது விண்வெளி வீரர் உள்ளே செல்கையில் புத்தம்புதிய காரிற்குள் செல்வதுபோலத்தான் இருந்ததென்றார். அது தனக்கு தனது வீட்டின் பிக்கப்பின் நினைவைக் கொண்டுவந்ததென்றார்.

இந்தக் கலம் நாசாவின் விண்வெளிக் கலத்துடன் இணைகையில் நியுசிலாந்திற்கு மேற்காக தஸ்மானியக் கடலிற்கு மேலாக 250 மைல் உயரத்தில் இருந்தது.

இதற்குள் நுழைந்த முதலாவது விண்வெளி வீரர் பெற்றிற், விண்வெளிக் கலத்தின் இயந்திரக் கையினால் ஆளற்ற Dragon கலத்தினைப் பிடித்திருந்தார். அதற்குள் 1400 இறாத்தல் பொருட்கள் இருந்தன. 19 அடி உயரமும் 12 அடி அகலமும் உள்ள இந்தக் கலம் செவ்வாய்க்கிழமையன்று இரண்டாம் முறையாக கேப் கனவெரல் பகுதியிலிருந்து ஏவப்பட்டதாகும்.

இது விரைவிலேயே விண்வெளி வீரர்களை விண்வெளிக்கும் புவிக்குமெனக் காவிச்செல்லும் கலமாகப் பிரபல்யமடைந்துவிடுமென விண்வெளி நிறுவனத்தினர் நம்புகின்றனர்.

ஏனைய சரக்குக் கலங்களைப் போலல்லாது புவிக்குள் இதனால் மீண்டும் பாதுகாப்பாக உள்நுழையமுடியும். வியாழன்று இதிலுள்ள பொருட்களனைத்தும் அகற்றப்பட்டதும் பசுபிக் சமுத்திரத்திற்குள் விழவைக்கப்படும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply