இஞ்சி துவையல்

Loading...

இஞ்சி துவையல்
தேவையானவை:
இஞ்சி – ஒரு சிறிய துண்டு (சுத்தம் செய்து நறுக் கிக் கொள்ளவும்), காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – அரை கப், புளி – சிறிதளவு, உளுத்தம் பருப்பு (வறுக்க) – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு (தாளிக்க) – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், உளுத்தம்பருப்பு, இஞ்சி ஆகியவற்றை வறுக்கவும். இத னுடன் புளி, உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து அரைக்கவும். இறுதியாக கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
துவையலை அம்மியில் அரைத்தால், மிகவும் சுவையாக இருக்கும். இந்த துவையல் ஜீரண சக்தியை அதி கரிக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply