ஆஸ்துமாவை குணப்படுத்தும் பப்பாளி

Loading...

ஆஸ்துமாவை குணப்படுத்தும் பப்பாளிபப்பாளி என்பது மர வகையைச் சார்ந்தது. பப்பாயி என்றும் இது அழைக்கப்பெறுவது. இதன் தாவரப்பெயர் கேரிகா பப்பாயா என்பது ஆகும். பப்பாளிப் பால் வயிற்றுக் கிறுமிகளை வெளித்தள்ளும் தன்மை வாய்ந்தது. இதைக் குழந்தைகளுக்குக்கூட உள்ளுக்குக் கொடுக்கலாம். மிகவும் பாதுகாப்பானது. காய் சமைத்துச் சாப்பிட சுவையாய் இருக்கும்.
காய் கருவைக் கரைக்கும் தன்மை உடையது என்பதால் கர்ப்பிணிகளுக்கு இது ஆகாது. பப்பாளிப் பாலை சர்க்கரை கலந்து உள்ளுக்குக் கொடுக்கக் குன்மம், வயிற்றுவலி (அல்சர்) சொறி, ஆகிய நோய்கள் விலகும். பப்பாளிப் பழம் இனிப்புச் சுவையும் நல்ல மனமும் பொருந்தியது. இது சுவையானது மட்டுமின்றி வெயிற்காலத்தில் இதைச் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி பெறும். பப்பாளிப் பழத்தை மேற்பூச்சாகப் பயன்படுத்த மேகப்படை, வண்டுக்கடி, படர் தாமரை ஆகிய நோய்கள் குணமாகும்.
காயைச் சமைத்து உண்பதால் வாதத்தால் ஏற்பட்ட உடல்வலி குணமாகும். பெண்களுக்குப் பால் சுரப்பு உண்டாகும். சூதகச் சிக்கலை நீக்கும். வயிற்றுக் கிருமிகள் வெளியேறும். தேள் கொட்டிய இடத்தில் பப்பாளிப் பாலைத் தடவுவ தால் விஷம் விரைவில் இறங்கி வலி குறையும். பப்பாளி இலையை வதக்கி நரம்பு வலியுள்ள இடங்களில் போட வலி விரைவில் தணியும். பழம் வயிற்றுக் கோளாறுகளை வேரறுக்க வல்லது. செரிமானத்தை சீர் செய்யக்கூடியது.
அகட்டு வாய்வகற்றி சிறுநீரைப் பெருக்கி வெளித்தள்ளக் கூடியது. தாய்ப்பாலைச் சுரக்க வைக்கும் தன்மை யுடையது. ரத்தம் கசியக் செய்யும் மூலத்தை குணமாக்க கூடியது. இருமலுடன் வெளிவரும் சளியில் ரத்தம் கலந்து வருவது குணமாகும். சீத பேதியையும் அதிசார பேதியையும் குணமாக்க வல்லது. பப்பாளி விதைகள் மாத விலக்கைத் தூண்டக் கூடியது. கருச்சிதவை உண்டு பண்ணக்கூடியது. வயிற்றுக் கிருமிகளை வெளித்தள்ளக் கூடியது. பப்பாளி விதைச் சாறு ஈரல் வீக்கத்தைக் கரைக்க கூடியது.
ரத்த மூலத்தை குணப்படுத்தக் கூடியது. பப்பாளிப் பால் மேற்பூச்சாக பூசுவதனால் எக்சிமா என்றும் நீர்க்கசிவும் நமைச்சலும், துர்நாற்றமும் வீசுகின்ற தோல் நோய்கள் விலகிப்போகும். ரிங்வார்ம், சோரியாஸிஸ, கால் ஆணி பாலுண்ணிகள் எனப்படும் மருக்கள், நாட்பட்ட ஆறாக் காயங்கள், புரையோடிய கட்டிகள், தீக்காயங்கள் ஆகியவை விரைவில் ஆறிவிடும். பப்பாளிப் பாலில் உள்ள கைமோ பேப் பைன் என்னும் மருத்துவ வேதிப்பொருள் ஒவ்வாமையால் ஏற்படும் பல்வேறு துன்பங்களைத் துடைத் தெறியக்கூடிய இம்யுனோ சப்ரசிங் என்சைம் என்கிற வகையில் உதவுகிறது. பப்பாளியின்று கிடைக்கின்ற கார்ப்பைன் எனப்படும் வேதிப்பொருள் காசநோய்த் தடுப்பு மருந்தாகப் பயன்படுகிறது.
மேலும் புற்று நோய்த் தடுப்பு மருத்துவத்துக்கும் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும் பயன்படுகிறது. பப்பாளியில் இருக்கும் சியா சாந்த்தின் எனப்படும் வேதிப் பொருள் ஓர் புத்துயிர்வு தரும் மருந்தாக பயன்பட்டு வயது முதிர்வதால் ஏற்படுகின்ற கண்பார்வைக் கோளாறுகளைச் சரி செய்யக் கூடியதாய் விளங்குகிறது. பப்பாளியில் பீட்டா கரோட்டின் என்னும் வைட்டமின் சத்து மிகுதியாக இருப்பதால் இதை தாராளமாக உணவாகச் சேர்த்துக் கொள்வதால் ஆஸ்துமா என்னும் மூச்சு முட்டல் நோய் வராமல் தடுக்கும் தடுப்பு மருந்தாக விளங்குகிறது.
பப்பாளியில் இருக்கும் பீட்டா கரோட்டின் ஆசன வாய்ப்புற்று நோயையும் குணப்படுத்தக் கூடியது. மேலும் பப்பாளியில் விட்டமின் கே என்னும் பொட்டாசியம் சத்து இருப்பதால் அது எலும்புகளுக்கு பலம் தருவதாக அமைகிறது. சுண்ணாம்புச் சத்தை வீணாகாமல், சிறு நீரில் வெளியேறாமல் பாதுகாத்து எலும்புகளுக்கு ஆரோக்கியம் அமைய உதவுகிறது. ஒரு நடுத்தர எடையுள்ள பப்பாளியில் 4.7 கிராம் அளவு நார்சத்து அடங்கியுள்ளது. முதல் நிலை சர்க்கரை நோயாளிகள் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வெகுவாகக் குறைய எதுவாகின்றது.
இரண்டாம் நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவும் கொழுப்பு மற்றும் இன்சுலின் அளவும் கூடுவதற்குத் துணை செய்கிறது. பப்பாளியில் மிகுந்திருக்கும் நீர்ச்சத்தும், நார்சத்தும் உணவு சீக்கிரத்தில் செரிமானம் ஆவதற்குத் துணை செய்கிறது. இதனால் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது. பப்பாளியின் உள்ள நார்சத்து பொட்டாசிம் விட்டமின்கள் ஆகியன இதயநோய்கள் வராமல் பாதுகாக்கின்றன.
பப்பாளிப் பழத்தில் விட்டமின் சி விட்டமின் ஈ புத்துயிர்வு தருவனவான பீட்டா கரோட்டின் ஆகியன தோலுக்கு ஆரோக்கியம் தந்து தோலில் சுருக்கங்கள் வராமல் தடுத்து இளமையோடு இருக்க உதவுகிறது. மேலும் பப்பாளியில் உள்ள பீட்டா கரோட்டின், புரோஸ்டேட் கேன்சர் எனப்படும் ஆண்களைப் பற்றித் துன்புறுத்தும் புரோஸ்டேட் கோளத்தில் ஏற்படும் புற்றினை குணமாக்குவதோடு வராமல் தடுக்கும் மருந்தாகவும் விளங்குகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply