ஆப்பிள் கோவா

Loading...

ஆப்பிள் கோவா
தேவையானவை:
ஆப்பிள் – 2, இனிப்பு இல்லாத கோவா, சர்க்கரை – தலா அரை கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், முந்திரி, பாதாம் – தலா 6, நெய் – கால் கப்.


செய்முறை:
ஆப்பிளை தோல் சீவி, துருவிக் கொள்ளவும். பாதாம், முந்திரியை மெல்லியதாக சீவிக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் நெய் விட்டு, காய்ந்ததும் சீவிய முந்திரி, பாதாமை லேசாக வறுத்து எடுக்கவும். வாணலியில் துருவிய ஆப்பிளை சேர்த்து (அடுப்பை ‘சிம்’மில் வைத்து) நன்கு கிளறவும். 10 நிமிடம் கழித்து பால்கோவா, சர்க்கரை சேர்த்து மேலும் கிளறவும் (சர்க்கரை சேர்த்தவுடன் சற்று இளகும்). எல்லாம் ஒன்று சேர்ந்து வரும்போது முந்திரி, பாதாம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறி, பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply