ஆபத்தை விளைவிக்கும் கமெரா!

Loading...

ஆபத்தை விளைவிக்கும் கமெரா!பொக்கிஷமாக பயன்படுத்தப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கும் கமெராக்கள் தற்போது ஆபத்தை விளைவிப்பதாக இருக்கிறது.
மாறிவரும் நவீன தொழில்நுட்ப பல ஆபத்துகளையும் கூடவே அழைத்து வருகிறது. அதிலும் கமெராக்கள் மூலம் தற்போது எழும் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
நமது நினைவுகளை நீண்ட காலம் அழியாமல் வைத்திருக்க வடிவமைக்கப்பட்ட இந்த கமெராக்கள், தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக பல வடிவமைப்பை பெற்றிருக்கிறது.
குற்றங்களை தடுக்க வடிவமைக்கப்பட்ட சிசிடிவி கமெராக்கள் அனைவரின் அந்தரங்களையும் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இதனால் அன்றாடம் வருகின்ற பிரச்சனைகள் ஏராளம்.
இதன் மூலம் ஒரு இடத்தில் நடக்கும் நிகழ்வுகளை மற்றொரு இடத்தில் இருந்து எளிதாக பதிவு செய்ய முடியும். DVR (Digital video recorder) என்ற அமைப்பு இதில் முக்கிய வேலையை செய்கிறது. இதனுடன் இணைக்கப்பட்ட Hard Disk இடைவிடாது வீடியோ பதிவுகளை பதிவு செய்கிறது.
இதிலிருந்து பெறப்படும் Domain nameயை வைத்து உலகின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் நாம் இந்த வீடியோ அமைப்பை கட்டுப்படுத்த முடியும்.
Analog, digital என இரண்டு வகையான கமெராக்கள் இருக்கின்றன. பொதுவாக Analog வகை கமெராக்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் உள்ள IR இரவிலும் நிகழ்வுகளை தெளிவாக படம் பிடிக்கிறது.
Hikvision, cp plus போன்ற முன்னணி நிறுவனங்களின் கமெராக்கள் அதிகம் பயன்பாட்டில் உள்ளன.
இந்த நோட்டமிடும் கமெராக்கள் மற்றவர்களுக்கு தெரிந்து அனைத்தையும் பதிவு செய்கிறது. ஆனால் மற்றவர்களுக்கு தெரியாமால் நோட்டமிடும் கமெராக்கள் தான் தற்போது இந்த சிசிடிவி உலகில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளன.
இதனை பல விஷமிகள் தவறாகவும் பயன்படுத்துகின்றனர். பேனாவின் மூடி, கதவின் பூட்டு பகுதி, பொம்மையின் கண்கள், சட்டையின் பட்டன், கடிகாரத்தின் முள், தண்ணீர் குழாயின் வாய் பகுதி என அனைத்து பகுதியிலும் வைத்து பயன்படுத்தும் விதமான Mirco Camera பல முக்கிய விடங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தாலும், இதனால் பிரச்சனைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
இவை அனைத்தும் சிறிய ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. படம் பிடித்தல் ஒரு இடத்தில் நடந்தாலும் பதிவுகள் வேறு இடத்தில் இடம் பெறுகிறது. நாம் இவற்றின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் போது இதன் மூலம் ஏற்படும் ஆபத்துகளை தவிக்க முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply