அழகுக் குறிப்பு

Loading...

அழகுக் குறிப்பு
தலைமுடி நன்றாக வளர்வதற்கான சிகைக்காய் பொடி வீட்டில் தயாரிக்கத் தேவையான பொருள்கள்:

சிகைக்காய் – 1 ½ கிலோ
பச்சைப்பயறு – 50 கிராம்
ஆவாரம் பூ – 200 கிராம்
உலர்ந்த ரோசாப்பூ – 20
கார்போ அரிசி – 20 கிராம்
நெல்லி முள்ளி – அரை ஆழாக்கு
வெந்தயம் – 50 கிராம்
நன்னாரி வேர் – 25 கிராம்
பூந்திக்கொட்டை – 10
அடுக்குச் செம்பருத்திப் பூ – 6
வெட்டிவேர் – 25 கிராம்
ஒற்றைச் செம்பருத்தி இலை – 10
மருதாணி – தேவையான அளவு
உலர்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல், கறிவேப்பிலை – தேவையான அளவு
துளசி இலை (காயவைத்தது) – தேவையான அளவு
இந்தக் கலவையை எல்லாம் வெயிலில் நன்றாக உலர்த்தி காய வைத்த பின், தூளாக அரைத்துச் சாதம் வடித்த கஞ்சித் தண்ணியிலோ அல்லது வெந்நீரிலோ ஊறவைத்த பின் தலையில் தேய்க்கவேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் தலை முடியை நன்றாக அலசவும்.
இவ்வாறு வாரம் ஒருமுறையாவது இந்த சிகைக்காய் பொடியை நன்கு தேய்த்துக் குளித்தால் தலைமுடி நன்றாக வளரும். மேலும் தலையில் உள்ள பேன், பொடுகுத் தொல்லை இருக்காது. இதில் சில பொருட்கள் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்.
தலைமுடி கருமையாக இருக்க சோற்றுக் கற்றாழையை நடுவில் கீறி வெந்தயத்தை சிறிதளவு கீறிய கற்றாழைக்குள் போட்டபின், அக்கற்றாழையை நன்றாக கயிறு கொண்டு கட்டவேண்டும். மறுநாள் அந்தக் கற்றாழையை எடுத்துப் பார்த்தால் உள்ளே போட்ட வெந்தயம் முளைவிட்டிருக்கும். முளைவிட்ட இந்த வெந்தயத்தை வெயிலில் போட்டு உலர்த்தி, தேங்காய் எண்ணெயுடன் வெட்டிவேரைப் போட்டு தொடர்ந்து தலைக்கு உபயோகிக்கலாம்.
தலைமுடி வறட்சியாக இருந்தால் ஒவ்வொரு முறையும் தலை முடியை அலசுவதற்கு முன்பு தேவையான அளவு எண்ணெயை நன்றாக தேய்க்க வேண்டும். மேல்முடி, கீழ்முடி அனைத்தையும் தயிர் அல்லது முட்டையை தலைமுடியில் தடவி விட்டு இருபது நிமிடம் கழித்துத் தலைமுடியை நன்றாக அலசவும், பின்னர் தலைமுடி மிருதுவாக இருக்கும்.
தயிர் நன்கு புளித்த தயிராக இருக்க வேண்டும்.

தலைமுடிக்கு ஹெர்பல் எண்ணெய் வீட்டிலேயே தயாரிக்கும் முறை:

தேங்காய் எண்ணெய் -100 கிராம்
ஆலிவ் எண்ணெய் – 100 கிராம்
பாதாம் எண்ணெய் -100 கிராம்
வைட்டமின் E எண்ணெய் -100 கிராம்
கடுகு எண்ணெய் -100 கிராம்
நல்லெண்ணெய் -100 கிராம்
கரிசலாங்கண்ணித் தைலம் -100 கிராம்
பொன்னாங்கன்னித் தைலம் –100 கிராம்
மருதாணித் தைலம் ­ -100 கிராம்
வேம்பாலம் பட்டை -100 கிராம்
சூரியகாந்தி எண்ணெய் -100 கிராம்
இந்த கலவைகளை நன்கு கலந்து, மிதமாகக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய் தலைமுடி ஆரோக்கியமாக வளர உதவும். இதில் சில பொருட்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

இதில் வீட்டில் கிடைப்பவை:

* கறிவேப்பிலை
* வேப்பிலை
* மருதாணி இலை
* செம்பருத்தி பூ இலை
* பொன்னாங்கண்ணிக் கீரை இலை
* மஞ்சள் கரிசலாங்கண்ணிக் இலை
* வல்லாரை, துளசி இலை
* முருங்கைக் கீரை
* தேயிலை

இந்த இலைகளை நன்றாக அரைத்து வடை போன்று தட்டி, நிழலில் உலர்த்தி, தேங்காய் எண்ணெயை மிதமாகச்சூடாக்கி அதில் இந்த வடையைப் போட்டு ஊற வைத்த பின் இந்த எண்ணெயைத் தலையில் தேய்க்கலாம். அவ்வாறு தேய்த்தால் தலைமுடி நன்கு கருகருப்பாக வளரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply