அழகி ஆகலாம்…அழகு குறிப்புகள்

Loading...

அழகி ஆகலாம்...அழகு குறிப்புகள்அழகி ஆகலாம்
முடி:
முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணையை தலைக்குத் தடவி ஒரு மணி நேரம் கழித்து அலசி வந்தால் முடி நன்றாக வளரும்.
கண்:
கண்ணைச் சுற்றி உள்ள கருவளையம் நீங்க வெள்ளரிக்காய் ஜூஸை பஞ்சில் நனைத்து கண்கள் மீது தினமும் போட்டு வரவும்.
உதடு:
உதடு வசீகரமாக இருக்க முட்டையின் வெண்கரு, பாதாம் பவுடர், பால் இம் மூன்றையும் கலந்து உதட்டில் தடவி அது காய்ந்ததும் சுடுநீரில் கழுவி எடுக்க வேண்டும்.
முகம்:
உருளைக்கிழங்கை இடித்துச் சாறு பிழிந்து, சமமாகத் தேன் கலந்து முகத்தில் தடவ, முகம் அழகு பெறும்.
முகச் சுருக்கம் நீங்க:
முட்டையின் வெண்கருவைத் தடவுங்கள். சிறிது நேரம் கழித்து முகம் கழுவ முகத்திலுள்ள சுருக்கம் மறையும்.
கருமை நீங்க:
கருமையடைந்த முகத்திற்கு, பாதாம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வர பொலிவு பெறும்.
முகத்தின் எண்ணைப் பசை நீங்க:
முட்டையின் வெண்கரு 7 ஸ்பூன், தேன் கால் ஸ்பூன், மாதுளை ஜூஸ் அரை ஸ்பூன் மூன்றையும் கலந்து அரை மணி நேரம் பூசிவிட்டு முகம் கழுவினால், எண்ணைப் பசை நீங்கிவிடும்.
முக வறட்சி நீங்க:
பச்சை கொத்த மல்லி அல்லது புதினாவை நன்றாக அரைத்து முகத்தில் பூசி பிறகு சிறிது நேரம் கழித்து அலம்ப வேண்டும்.
கரும்புள்ளி மறைய:
முகப்பருவால் ஏற் படும் ஜாதிக்காயை அரைத்துப் போடவும்.
முகப்பரு நீங்க:
பூண்டு அல்லது கருந் துளசியை அரைத்துப் போட நாளடைவில் பருக்கள் மறையும்.
வாய் நாற்றம்:
புதினா கீரையைக் காய வைத்து பொடி செய்து பல் துலக்குவதால் வாய் நாற்றமின்றிப் பல் பளிச்சென்றிருக்கும்.
வெண்மையான பல்:
இரவு நேரத்தில் பச்சை கேரட்டை மென்று தின்றால் பல் உறுதியடைவதுடன், பல் வெண்மை பெறும்.
உதடு:
உதட்டில் தேங்காய் எண்ணை தடவி வந்தால் ஷைனிங்காக இருக்கும்.
கை:
பாத்திரம் தேய்ப்பதால் ஏற்படும் கை வெடிப்புகளுக்கு உருளைக்கிழங்கை வேக வைத்து பொடித்து கைகளில் தேய்த்து வந் தால் கை மிருதுவாக இருக்கும்.
நகம்:
நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க சூரியகாந்தி எண் ணையை கை, கால் நகங்களில் தடவ வேண்டும்.
மார்பகங்களைப் பாதுகாக்க:
வெள்ளைக் குன்றிமணி வேரை எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்றாக அரைத்து மார்பகங்களின் மீது பூசிவர, தளர்ந்த மார்பகம் சரியான வடிவம் பெறும்.
வியர்வை நாற்றம்:
ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி, சமமான அளவு பயத்தம் மாவு கலந்து அரைத்து தினமும் தேய்த்துக் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் அகலும்.
உடல் பருமன்:
பப்பாளிக் காயை பொறியலோ, குழம்பு வைத்தோ வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
பாதம்:
பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க விளக்கெண்ணை ஒரு ஸ்பூன், பன்னீர் இரண்டு ஸ்பூன், எலுமிச்சம் சாறு ஒரு ஸ்பூன் மூன்றையும் கலந்து வெந் நீரில் பத்து நிமிடம் காலை ஊறவிட்டு, பின்பு இக்கலவையைப் பூசிவர வெடிப்பு நீங்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply